• Dec 28 2024

பாதுகாப்பாற்ற மின் வேலிகளில் சிக்கி சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Chithra / Dec 23rd 2024, 1:17 pm
image


  

2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஏற்கனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், காட்டு யானைகளை பாதுகாக்க மக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதால்,

வேலிகள் அல்லது கம்பிகளுக்கு அனுமதியின்றி மின்சாரம் வழங்குவது குறித்து அறிவிக்குமாறு மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, 011 211 8767 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது 1987 என்ற துரித இலக்கத்தினூடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறு அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பாற்ற மின் வேலிகளில் சிக்கி சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழப்பு   2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஏற்கனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், காட்டு யானைகளை பாதுகாக்க மக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதால்,வேலிகள் அல்லது கம்பிகளுக்கு அனுமதியின்றி மின்சாரம் வழங்குவது குறித்து அறிவிக்குமாறு மின்சார சபை அறிவித்துள்ளது.இதன்படி, 011 211 8767 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது 1987 என்ற துரித இலக்கத்தினூடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறு அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement