• May 03 2024

கொரோனா தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு! SamugamMedia

Tamil nila / Mar 18th 2023, 6:22 pm
image

Advertisement

கொரோனா பெரிய அளவில் பரவும் கொள்ளைநோய் என்ற நிலை இவ்வாண்டு முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகச் சுகாதார நிறுவனம் இந்த விடயத்தை அறிவித்திருக்கிறது. 

முன்பைவிட இப்போதைய நிலைமை மேம்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) கூறினார். 

கடந்த 4 வாரங்களில் கொரோனா  மரண எண்ணிக்கை முதல்முறையாகக் குறைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா  உலகெங்கும் பரவும் கொள்ளைநோயாக அறிவிக்கப்பட்டது. 

இப்போது அந்த நிலை முடிவுக்கு வரவிருப்பதாகவும் இனிகொரோனா நோயைச் சாதாரண சளிக்காய்ச்சல் போலவே பார்க்கலாம் என்றும் உலகச் சுகாதார நிறுவன அவசரப் பிரிவு இயக்குநர் மைக்கல் ராயன் கூறினார். 

கொரோனா  தொடர்ந்து பரவிக் கொண்டிருந்தாலும் அது இனிமேல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் குறைவு என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். 

கொரோனா தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு SamugamMedia கொரோனா பெரிய அளவில் பரவும் கொள்ளைநோய் என்ற நிலை இவ்வாண்டு முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உலகச் சுகாதார நிறுவனம் இந்த விடயத்தை அறிவித்திருக்கிறது. முன்பைவிட இப்போதைய நிலைமை மேம்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) கூறினார். கடந்த 4 வாரங்களில் கொரோனா  மரண எண்ணிக்கை முதல்முறையாகக் குறைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா  உலகெங்கும் பரவும் கொள்ளைநோயாக அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த நிலை முடிவுக்கு வரவிருப்பதாகவும் இனிகொரோனா நோயைச் சாதாரண சளிக்காய்ச்சல் போலவே பார்க்கலாம் என்றும் உலகச் சுகாதார நிறுவன அவசரப் பிரிவு இயக்குநர் மைக்கல் ராயன் கூறினார். கொரோனா  தொடர்ந்து பரவிக் கொண்டிருந்தாலும் அது இனிமேல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் குறைவு என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். 

Advertisement

Advertisement

Advertisement