• Jan 07 2025

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய இராணுவத் தளபதி!

Chithra / Dec 31st 2024, 11:29 am
image

 

இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று பதவியேற்றுள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் இன்று (31) தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுள்ளார்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று (30) நியமிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் நேற்று (30) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

மேலும், இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று (31) தமது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய இராணுவத் தளபதி  இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று பதவியேற்றுள்ளார்.இராணுவ தலைமையகத்தில் இன்று (31) தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுள்ளார்.புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று (30) நியமிக்கப்பட்டிருந்தனர்.இது தொடர்பான நியமனக் கடிதங்கள் நேற்று (30) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.மேலும், இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று (31) தமது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement