யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட தையிட்டி காணி உரிமையாளர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுரஅரசாங்கத்தின் அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கூடிய விரைவில் தீர்வை தருவதாக சொல்லியுள்ள அதே சந்தர்ப்பத்தில் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் புதிய கட்டிட திறப்பு இடம்பெறவுள்ளது. இது வேதனைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள காணி உரிமையாளர் ஒருவர் தமிழ் மக்கள் இதனை புரிந்துகொள்ளாவிட்டால் இதுபோன்று பல விடயங்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
பௌத்த சாசன அமைச்சர். அவருடைய அலுவலகத்தில் வைத்து ஒரு மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தார், அவர் அங்கு தெளிவாக சொல்லியிருந்த விடயம் மக்களின்காணிகள் என்றால் மக்களிற்கே கையளிக்கவேண்டும் என்று. இது தங்கள் அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையிலே நாங்கள் உறுதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் காட்டியிருந்தோம்.
இது தங்களுடைய விடயங்களிற்கு பொறுப்பானதல்ல காணி அமைச்சிற்கும் பொறுப்பானது என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அவர்களும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்கள். இதற்குரிய முடிவை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க முயல்கின்றோம் என அவர் சொல்லியுள்ள நிலையில் அவருடைய அரசாங்கம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக புதிய கட்டிடத்தை திறக்க முயல்வது மன வருத்தத்திற்குரிய விடயம்.
மக்கள் இதனை உணராவிட்டால் இதுபோல பல விடயங்கள் நடக்கும்இ சகல மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். என தெரிவித்தார்.
தையிட்டியில் விகாரை வளாகத்திற்குள் புதிய கட்டிடம்; இன்று திறப்பதற்கு திட்டம் வெடித்தது போராட்டம் யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இந்நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட தையிட்டி காணி உரிமையாளர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுரஅரசாங்கத்தின் அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கூடிய விரைவில் தீர்வை தருவதாக சொல்லியுள்ள அதே சந்தர்ப்பத்தில் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் புதிய கட்டிட திறப்பு இடம்பெறவுள்ளது. இது வேதனைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள காணி உரிமையாளர் ஒருவர் தமிழ் மக்கள் இதனை புரிந்துகொள்ளாவிட்டால் இதுபோன்று பல விடயங்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.பௌத்த சாசன அமைச்சர். அவருடைய அலுவலகத்தில் வைத்து ஒரு மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தார், அவர் அங்கு தெளிவாக சொல்லியிருந்த விடயம் மக்களின்காணிகள் என்றால் மக்களிற்கே கையளிக்கவேண்டும் என்று. இது தங்கள் அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இதன் அடிப்படையிலே நாங்கள் உறுதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் காட்டியிருந்தோம்.இது தங்களுடைய விடயங்களிற்கு பொறுப்பானதல்ல காணி அமைச்சிற்கும் பொறுப்பானது என அமைச்சர் தெரிவித்திருந்தார்.அவர்களும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்கள். இதற்குரிய முடிவை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க முயல்கின்றோம் என அவர் சொல்லியுள்ள நிலையில் அவருடைய அரசாங்கம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக புதிய கட்டிடத்தை திறக்க முயல்வது மன வருத்தத்திற்குரிய விடயம்.மக்கள் இதனை உணராவிட்டால் இதுபோல பல விடயங்கள் நடக்கும்இ சகல மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். என தெரிவித்தார்.