• Jan 11 2025

கடமைகளை பொறுப்பேற்றார் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி!

Chithra / Jan 2nd 2025, 8:54 am
image

 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று (01) மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு பெற்றவர்) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவிடமிருந்து (ஓய்வு பெற்றவர்) நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் அவரது அலுவலகத்தில்  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஓய்வுபெற்றதையடுத்து, வெற்றிடமான தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி பதவிக்கு மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடமைகளை பொறுப்பேற்றார் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.நேற்று (01) மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு பெற்றவர்) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவிடமிருந்து (ஓய்வு பெற்றவர்) நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் அவரது அலுவலகத்தில்  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஓய்வுபெற்றதையடுத்து, வெற்றிடமான தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி பதவிக்கு மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement