• Jan 26 2025

புதிய மின்கட்டண திருத்தம் - நாளைமறுதினம் வரவுள்ள அறிவிப்பு

Chithra / Jan 15th 2025, 12:56 pm
image


மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிக்கு தற்போது நடைமுறையிலுள்ள மின் கட்டண நடைமுறையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல மின்சார சபை யோசளை முன்வைத்துள்ளது. 

இந்த யோசனை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மக்கள் கருத்துக் கணிப்புகளை முன்னெடுக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்தக் கருத்துக் கணிப்புகள் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. 

இதன்போது மின் கட்டணத்தை 20 – 30 சதவீதத்தால் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது தற்போது நடைமுறையிலுள்ள கட்டண முறையை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை மறுதினம் அறிவிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய மின்கட்டண திருத்தம் - நாளைமறுதினம் வரவுள்ள அறிவிப்பு மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிக்கு தற்போது நடைமுறையிலுள்ள மின் கட்டண நடைமுறையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல மின்சார சபை யோசளை முன்வைத்துள்ளது. இந்த யோசனை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மக்கள் கருத்துக் கணிப்புகளை முன்னெடுக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.அந்தக் கருத்துக் கணிப்புகள் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இதன்போது மின் கட்டணத்தை 20 – 30 சதவீதத்தால் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது தற்போது நடைமுறையிலுள்ள கட்டண முறையை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை மறுதினம் அறிவிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement