• Jan 11 2025

புதிய அரசமைப்பு; தமிழரசுக் கட்சியைப் புறம்தள்ளி சிறிதரனுடன் பேச கஜேந்திரகுமார் முயற்சி; கொழும்புக் கிளை அதிருப்தி..!

Sharmi / Jan 4th 2025, 9:44 am
image

புதிய அரசமைப்பு விடயத்தில் தமிழரசுக் கட்சியைப் புறம்தள்ளி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது  சிறிதரனுடன் பேச முற்படுவதற்கு தமிழரசுக் கட்சி இடமளிக்கக்கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சி.இரத்தினவடிவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றிலேயே அவர் இந்த விடயங்களைத் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

"2015 முதல் 2020 ஆம் ஆண்டுவரையான காலப் பகுதியில் 84 தடவைகள்  அனைத்துக் கட்சிகளும் கூடி ஓர் அரசமைப்பு வரவைத் தயாரித்தன.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சி முழு மூச்சில் ஈடுபட்டு சமஷ்டி அம்சங்களைக் கொண்ட பல முன்னேற்றகரமான அம்சங்களை உள்ளீடு செய்ய வைத்தது.

ஐந்து ஆண்டு இடைவிடா முயற்சியின் பின் இறுதி வரைவில் சம்பந்தன் ஐயா, அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் அதிலுள்ள சிறந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு கையொப்பமிட்டனர்.

தற்போது ஆட்சியிலிருக்கும் தரப்பும் அதனை ஏற்றுக்கொண்டது. அதனை ஏற்று மேலும் திருத்தங்கள் செய்து புதிய அரசமைப்பைக் கொணரப்போவதாக இந்த அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு வழங்கியுள்ளது.

இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இப்போது இந்த ஐந்து ஆண்டு எமது கட்சியினதும் தலைவர்களினதும் முயற்சியை செல்லாக்காசாக்க அவர் முயற்கின்றார். தவிரவும், எப்போதுமே தமிழர் நன்மைகளை விட தமிழரசுக் கட்சியை மலினப்படுத்துவதையே மேலான செயற்பாடாகக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த முன்னேற்றகரமான அரசமைப்பு வரைவைக் குறை கூறினார்.

அதற்கு முக்கிய காரணம் தமிழரசின் பங்களிப்புடன் வரும் இந்த ஏற்பாடுகளை எதிர்க்க வேண்டுமே என்பதே அன்றி வேறேதும் இல்லை.

இந்தப் பின்னணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது இதனைப் புறந்தள்ளி தான் முன்பு முன்நிலைப்படுத்திய விக்னேஸ்வரன் தலைமையிலான ஆலோசனைகளை முன்தள்ள முற்படுகின்றார். இந்த யோசனைகளை தமிழரசு எப்போதுமே ஏற்றுக்கொண்டதில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது தமிழரசுக் கட்சிக்குப் பெயர் போய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு கபடத் திட்டத்துக்குத் தமிழரசுக் கட்சியை உடந்தையாக்கப் பார்க்கின்றார்.

தமிழரசுக் கட்சியை எப்போதுமே மலினப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்து வந்தவர் இப்போது அந்தக் கட்சியிலுள்ளதாகக் கருதப்படும் உள்ளக முரண்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் உள்நோக்குடன் கட்சியைப் புறந்தள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் பேச முற்படுகின்றார்.

இவரது நோக்கம் நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது அல்ல என்பதை கட்சியிலுள்ள அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

சென்ற வாரம் அவர் வழங்கிய பேட்டியில் தமிழரசுக் கட்சி தொடர்பிலும் அதன் முக்கியஸ்தர்கள் தொடர்பிலும் கடுமையான வெறுப்பு விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பது யாவரும் அறிந்ததே.

எனவே, தமிழ் மக்களின் நன்மைகளை முன்னிலைப்படுத்தாது தன்னை முன்னிலைப்படுத்துவதும் தமிழரசுக் கட்சியைப் பலவீனப்படத்துவதற்குமான ஒரு உபாயமாக மட்டுமே அவர் இப்போது முன்னெடுக்கும் இத்தகைய முயற்சி உள்ளது.

அதற்குத் தமிழரசுக் கட்சி இடமளிக்கக்கூடாது. இதனைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற சிறீதரன் மற்றும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இவருடன் இது விடயம் தொடர்பில் எதுவித பேச்சுக்களையும் முன்னெடுப்பது தமிழர் நலனுக்கோ கட்சிக்கோ உகந்ததல்ல என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். என்றுள்ளது.

புதிய அரசமைப்பு; தமிழரசுக் கட்சியைப் புறம்தள்ளி சிறிதரனுடன் பேச கஜேந்திரகுமார் முயற்சி; கொழும்புக் கிளை அதிருப்தி. புதிய அரசமைப்பு விடயத்தில் தமிழரசுக் கட்சியைப் புறம்தள்ளி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது  சிறிதரனுடன் பேச முற்படுவதற்கு தமிழரசுக் கட்சி இடமளிக்கக்கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சி.இரத்தினவடிவேல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றிலேயே அவர் இந்த விடயங்களைத் குறிப்பிட்டுள்ளார்.அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது"2015 முதல் 2020 ஆம் ஆண்டுவரையான காலப் பகுதியில் 84 தடவைகள்  அனைத்துக் கட்சிகளும் கூடி ஓர் அரசமைப்பு வரவைத் தயாரித்தன. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சி முழு மூச்சில் ஈடுபட்டு சமஷ்டி அம்சங்களைக் கொண்ட பல முன்னேற்றகரமான அம்சங்களை உள்ளீடு செய்ய வைத்தது.ஐந்து ஆண்டு இடைவிடா முயற்சியின் பின் இறுதி வரைவில் சம்பந்தன் ஐயா, அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் அதிலுள்ள சிறந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு கையொப்பமிட்டனர். தற்போது ஆட்சியிலிருக்கும் தரப்பும் அதனை ஏற்றுக்கொண்டது. அதனை ஏற்று மேலும் திருத்தங்கள் செய்து புதிய அரசமைப்பைக் கொணரப்போவதாக இந்த அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு வழங்கியுள்ளது.இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இப்போது இந்த ஐந்து ஆண்டு எமது கட்சியினதும் தலைவர்களினதும் முயற்சியை செல்லாக்காசாக்க அவர் முயற்கின்றார். தவிரவும், எப்போதுமே தமிழர் நன்மைகளை விட தமிழரசுக் கட்சியை மலினப்படுத்துவதையே மேலான செயற்பாடாகக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த முன்னேற்றகரமான அரசமைப்பு வரைவைக் குறை கூறினார். அதற்கு முக்கிய காரணம் தமிழரசின் பங்களிப்புடன் வரும் இந்த ஏற்பாடுகளை எதிர்க்க வேண்டுமே என்பதே அன்றி வேறேதும் இல்லை.இந்தப் பின்னணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது இதனைப் புறந்தள்ளி தான் முன்பு முன்நிலைப்படுத்திய விக்னேஸ்வரன் தலைமையிலான ஆலோசனைகளை முன்தள்ள முற்படுகின்றார். இந்த யோசனைகளை தமிழரசு எப்போதுமே ஏற்றுக்கொண்டதில்லை.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது தமிழரசுக் கட்சிக்குப் பெயர் போய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு கபடத் திட்டத்துக்குத் தமிழரசுக் கட்சியை உடந்தையாக்கப் பார்க்கின்றார். தமிழரசுக் கட்சியை எப்போதுமே மலினப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்து வந்தவர் இப்போது அந்தக் கட்சியிலுள்ளதாகக் கருதப்படும் உள்ளக முரண்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் உள்நோக்குடன் கட்சியைப் புறந்தள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் பேச முற்படுகின்றார்.இவரது நோக்கம் நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது அல்ல என்பதை கட்சியிலுள்ள அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.சென்ற வாரம் அவர் வழங்கிய பேட்டியில் தமிழரசுக் கட்சி தொடர்பிலும் அதன் முக்கியஸ்தர்கள் தொடர்பிலும் கடுமையான வெறுப்பு விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பது யாவரும் அறிந்ததே.எனவே, தமிழ் மக்களின் நன்மைகளை முன்னிலைப்படுத்தாது தன்னை முன்னிலைப்படுத்துவதும் தமிழரசுக் கட்சியைப் பலவீனப்படத்துவதற்குமான ஒரு உபாயமாக மட்டுமே அவர் இப்போது முன்னெடுக்கும் இத்தகைய முயற்சி உள்ளது.அதற்குத் தமிழரசுக் கட்சி இடமளிக்கக்கூடாது. இதனைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற சிறீதரன் மற்றும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இவருடன் இது விடயம் தொடர்பில் எதுவித பேச்சுக்களையும் முன்னெடுப்பது தமிழர் நலனுக்கோ கட்சிக்கோ உகந்ததல்ல என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement