• Oct 30 2024

ஜப்பானில் இலங்கையர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு!

Chithra / May 14th 2024, 10:59 am
image

Advertisement

 

ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்களை இலங்கையர்களுக்கு வழங்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, கட்டட சுத்திகரிப்பு துறையில் புதிய தொழில் வாய்ப்புக்களை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவிக்கின்றது.

அத்துடன் நிர்மாணத்துறை, விமான நிலைய தரை சுத்திகரிப்பு, தங்குமிட தொழில்துறை உள்ளிட்ட 7 துறைகளுக்காக இலங்கையர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்வாய்ப்புக்களுக்காக ஜுன் மாதம் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும் ஜப்பானில் இதுவரை இலங்கையர்களுக்கு 37000 தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜப்பானில் இலங்கையர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு  ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்களை இலங்கையர்களுக்கு வழங்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, கட்டட சுத்திகரிப்பு துறையில் புதிய தொழில் வாய்ப்புக்களை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவிக்கின்றது.அத்துடன் நிர்மாணத்துறை, விமான நிலைய தரை சுத்திகரிப்பு, தங்குமிட தொழில்துறை உள்ளிட்ட 7 துறைகளுக்காக இலங்கையர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த தொழில்வாய்ப்புக்களுக்காக ஜுன் மாதம் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தூதரகம் அறிவித்துள்ளது.மேலும் ஜப்பானில் இதுவரை இலங்கையர்களுக்கு 37000 தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement