• Nov 23 2024

கண்டி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

Chithra / May 24th 2024, 9:20 am
image

 

கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கண்டிக்கு மத்திய தேசிய பல்வகை போக்குவரத்து நிலையத்தை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமரின் செயலாளர் தலைமையில் கிரேட்டர் கண்டி எனும் விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய போக்குவரத்து அமைப்பாக நவீன தொழில்நுட்பத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தற்போது இதன் ஒரு பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட திட்டமாக கண்டி மாநகரில் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய செயற்திட்டமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

கண்டி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்  கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கண்டிக்கு மத்திய தேசிய பல்வகை போக்குவரத்து நிலையத்தை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமரின் செயலாளர் தலைமையில் கிரேட்டர் கண்டி எனும் விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய போக்குவரத்து அமைப்பாக நவீன தொழில்நுட்பத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.தற்போது இதன் ஒரு பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட திட்டமாக கண்டி மாநகரில் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய செயற்திட்டமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement