நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென தெரிவிப்பட்டுள்ளது.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணியின் இராஜகிரிய பகுதியில் உள்ள அலுவலகத்தால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் புதிய கூட்டணியொன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த கூட்டணியுடன் இணைந்து செயல்படவுள்ள தரப்பினருடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்சியின் சின்னம் மற்றும் அதன் வடிவம் தொடர்பான இறுதி கட்ட தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜகிரியில் உள்ள கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், ராஜபக்சக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சில உறுப்பினர்களும் நிமல் லன்சா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணி: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நகர்வு samugammedia நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென தெரிவிப்பட்டுள்ளது. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணியின் இராஜகிரிய பகுதியில் உள்ள அலுவலகத்தால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் புதிய கூட்டணியொன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த கூட்டணியுடன் இணைந்து செயல்படவுள்ள தரப்பினருடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கட்சியின் சின்னம் மற்றும் அதன் வடிவம் தொடர்பான இறுதி கட்ட தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜகிரியில் உள்ள கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும், ராஜபக்சக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சில உறுப்பினர்களும் நிமல் லன்சா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.