• Nov 23 2024

இந்தியா செல்லாமல் சீனா செல்லும் மாலைத்தீவு புதிய அதிபர் - பின்னணி என்ன?..samugammedia

Tharun / Jan 7th 2024, 10:54 am
image

மாலைத்தீவின் புதிய அதிபர் முய்சு இந்த மாதம் சீனாவிற்கு அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்த ஐந்து நாள் பயணத்தை உறுதி செய்து அவரது பயணத்திற்கான திகதிகளையும் அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில்  வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங்  தெரிவிக்கையில், , “மாலைத்தீவு அதிபர் முய்சு, சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனவரி 8 முதல் 12ஆம் திகதி வரை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார், எனத் தெரிவித்தார்.

அத்துடன் "இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாக விவாதிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படும்."

"அதிபரைத் தவிர, சீனப் பிரதமர் லி சியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரும் அவரை முறைப்படி சந்திப்பார்கள்."

சீனாவிற்கும் மாலைத்தீவிற்கும் இடையிலான உறவுகள் குறித்தும் வாங் வென்பின் வலியுறுத்தினார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் பழமையானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த இதேவேளை மாலைத்தீவு அதிபர் அலுவலகமும் இந்தப் பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன்,அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ​​அவரது கட்சி 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்துப் பிரசாரம் மேற்கொண்டதுடன் மாலைத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாகவும் கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, இந்திய அரசின் சார்பில் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜூவுடன் அவர் நேரில் சந்தித்துப் பேசியபோது, ​​இந்த விவகாரம் குறித்து முறைப்படி பேச்சு நடத்தினார்.இதேவேளை மாலைத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு அதிபர் ஷி ஜின்பிங் வரவேற்பு விழா  ஒன்று நடத்தவுள்ளதாகவும், இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாக விவாதிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாகவும், மேலும் அதிபரைத் தவிர, சீனப் பிரதமர் லி சியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரும் அவரை முறைப்படி சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா செல்லாமல் சீனா செல்லும் மாலைத்தீவு புதிய அதிபர் - பின்னணி என்ன.samugammedia மாலைத்தீவின் புதிய அதிபர் முய்சு இந்த மாதம் சீனாவிற்கு அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்த ஐந்து நாள் பயணத்தை உறுதி செய்து அவரது பயணத்திற்கான திகதிகளையும் அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில்  வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங்  தெரிவிக்கையில், , “மாலைத்தீவு அதிபர் முய்சு, சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனவரி 8 முதல் 12ஆம் திகதி வரை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார், எனத் தெரிவித்தார்.அத்துடன் "இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாக விவாதிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படும்.""அதிபரைத் தவிர, சீனப் பிரதமர் லி சியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரும் அவரை முறைப்படி சந்திப்பார்கள்."சீனாவிற்கும் மாலைத்தீவிற்கும் இடையிலான உறவுகள் குறித்தும் வாங் வென்பின் வலியுறுத்தினார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் பழமையானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த இதேவேளை மாலைத்தீவு அதிபர் அலுவலகமும் இந்தப் பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன்,அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ​​அவரது கட்சி 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்துப் பிரசாரம் மேற்கொண்டதுடன் மாலைத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய அரசின் சார்பில் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜூவுடன் அவர் நேரில் சந்தித்துப் பேசியபோது, ​​இந்த விவகாரம் குறித்து முறைப்படி பேச்சு நடத்தினார்.இதேவேளை மாலைத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு அதிபர் ஷி ஜின்பிங் வரவேற்பு விழா  ஒன்று நடத்தவுள்ளதாகவும், இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாக விவாதிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாகவும், மேலும் அதிபரைத் தவிர, சீனப் பிரதமர் லி சியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரும் அவரை முறைப்படி சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement