• Jan 13 2025

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

Chithra / Jan 2nd 2025, 9:35 am
image

 

இந்த வருடம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 

அதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவான மாதமாக இருந்தது. 

233,087 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, புத்தாண்டில் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியன் வரை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்  இந்த வருடம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவான மாதமாக இருந்தது. 233,087 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, புத்தாண்டில் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியன் வரை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement