• Nov 06 2024

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு – திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு!

Chithra / Jun 14th 2024, 9:10 am
image

Advertisement

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.

அவசியம் ஏற்படுமாயின் இந்தப் புதிய யாப்பில் திருத்தங்களைச் செய்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த இதனைத் தெரிவித்தார்.

“தற்போது, அரசாங்கம் “உறுமய” மற்றும் “அஸ்வெசும” உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 

அத்துடன் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் கிராமம் மற்றும் நகரங்களில் மீண்டும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

தற்போது 1942 கிராம சேவைப் பிரிவுகளுக்கு கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மேலும், நாடு முழுவதும் கிராமிய உணவுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் போசாக்குக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்க முடிந்துள்ளது. என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு – திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.அவசியம் ஏற்படுமாயின் இந்தப் புதிய யாப்பில் திருத்தங்களைச் செய்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த இதனைத் தெரிவித்தார்.“தற்போது, அரசாங்கம் “உறுமய” மற்றும் “அஸ்வெசும” உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் கிராமம் மற்றும் நகரங்களில் மீண்டும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.தற்போது 1942 கிராம சேவைப் பிரிவுகளுக்கு கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் கிராமிய உணவுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் போசாக்குக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்க முடிந்துள்ளது. என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement