• Nov 26 2024

பல் துலப்பான்கள், பாத்ரூம் ஷவர்களில் புதிய வகை வைரஸ்- ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Tamil nila / Oct 13th 2024, 8:04 pm
image

பல் துலப்பான்கள் (Toothbrush), பாத்ரூம் ஷவர்களில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆபத்தானவை இல்லை என்றும் பாக்டீரியாவை மட்டுமே தாக்கும் வைரஸ் என்பதும் இதன் மூலம் மருத்துவ சிகிச்சையில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நாம் அன்றாட வாழ்வில் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்குவதில் இருந்து தான் நாளை தொடங்குகிறோம். அப்படி பல் துலக்கும் போது நம் வாயில் இருக்கும் நுண்கிருமிகள் துர்நாற்றங்களை பல் துலப்பான் மூலம் குறைக்க முடிகிறது. பல் துலப்பான்களில் ஏற்கனவே நுண்ணுயிரிகள் இருப்பது தெரியும். ஆனால் இதுவரையும் கண்டறியப்படாத புதிய வைரஸ்களை வடமேற்கு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வைரஸ்கள் "பாக்டீரியோபேஜ்" எனப்படும் வகையைச் சேர்ந்தவை. இவை பாக்டீரியாவை தாக்கி, அதன் உள்ளே நகலெடுக்கும் தன்மை கொண்டவை. பேஜ் வைரஸ்கள் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு உள்ள பாக்டீரியா தொற்றுகளை சிகிச்சையளிப்பதில் சமீப காலங்களில் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நமது குளியலறைகளில் உள்ள இந்த முன்பு அறியப்படாத வைரஸ்கள், எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் பயன்படக்கூடியவை என்று கருதப்படுகிறது.

இந்த ஆய்வு முந்தைய ஆராய்ச்சியின் தொடர்ச்சியாகும், இதில் டாக்டர் ஹார்ட்மேன் மற்றும் அவரது குழுவினர் பல் துலக்குதல்கள் மற்றும் ஷவர் ஹெட்களிலிருந்து மாதிரிகளை சேகரித்தனர். இதுவரை 600 க்கும் மேற்பட்ட வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆய்வில் மைக்கோபாக்டீரியோபேஜ் வைரஸ்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டன. இது தொழுநோய், காசநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரியாவை தாக்கும் வகையிலானவை. இந்த வைரஸ்கள் ஒரு நாள் பாக்டீரியா தொற்றுகளுக்கான சிகிச்சையாக பயன்படுத்தப்படும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நமது குளியலறையில் இருக்கும் இந்த நுண்ணுயிர்களைப் பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் ஷவர்ஹெட்களை, பல துலப்பான்களை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நம்மைச் சுற்றி காணப்படாத பல்லுயிர் பெருக்கம் எவ்வளவு நிறைந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க வெகு தொலைவு செல்ல வேண்டியதில்லை; அது எங்கள் குளியலறைகளிலேயே உள்ளது என டாக்டர் ஹார்ட்மேன் கூறியுள்ளார்.

பல் துலப்பான்கள், பாத்ரூம் ஷவர்களில் புதிய வகை வைரஸ்- ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பல் துலப்பான்கள் (Toothbrush), பாத்ரூம் ஷவர்களில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆபத்தானவை இல்லை என்றும் பாக்டீரியாவை மட்டுமே தாக்கும் வைரஸ் என்பதும் இதன் மூலம் மருத்துவ சிகிச்சையில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.நாம் அன்றாட வாழ்வில் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்குவதில் இருந்து தான் நாளை தொடங்குகிறோம். அப்படி பல் துலக்கும் போது நம் வாயில் இருக்கும் நுண்கிருமிகள் துர்நாற்றங்களை பல் துலப்பான் மூலம் குறைக்க முடிகிறது. பல் துலப்பான்களில் ஏற்கனவே நுண்ணுயிரிகள் இருப்பது தெரியும். ஆனால் இதுவரையும் கண்டறியப்படாத புதிய வைரஸ்களை வடமேற்கு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த வைரஸ்கள் "பாக்டீரியோபேஜ்" எனப்படும் வகையைச் சேர்ந்தவை. இவை பாக்டீரியாவை தாக்கி, அதன் உள்ளே நகலெடுக்கும் தன்மை கொண்டவை. பேஜ் வைரஸ்கள் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு உள்ள பாக்டீரியா தொற்றுகளை சிகிச்சையளிப்பதில் சமீப காலங்களில் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நமது குளியலறைகளில் உள்ள இந்த முன்பு அறியப்படாத வைரஸ்கள், எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் பயன்படக்கூடியவை என்று கருதப்படுகிறது.இந்த ஆய்வு முந்தைய ஆராய்ச்சியின் தொடர்ச்சியாகும், இதில் டாக்டர் ஹார்ட்மேன் மற்றும் அவரது குழுவினர் பல் துலக்குதல்கள் மற்றும் ஷவர் ஹெட்களிலிருந்து மாதிரிகளை சேகரித்தனர். இதுவரை 600 க்கும் மேற்பட்ட வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.ஆய்வில் மைக்கோபாக்டீரியோபேஜ் வைரஸ்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டன. இது தொழுநோய், காசநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரியாவை தாக்கும் வகையிலானவை. இந்த வைரஸ்கள் ஒரு நாள் பாக்டீரியா தொற்றுகளுக்கான சிகிச்சையாக பயன்படுத்தப்படும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.நமது குளியலறையில் இருக்கும் இந்த நுண்ணுயிர்களைப் பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் ஷவர்ஹெட்களை, பல துலப்பான்களை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.நம்மைச் சுற்றி காணப்படாத பல்லுயிர் பெருக்கம் எவ்வளவு நிறைந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க வெகு தொலைவு செல்ல வேண்டியதில்லை; அது எங்கள் குளியலறைகளிலேயே உள்ளது என டாக்டர் ஹார்ட்மேன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement