• May 02 2025

மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்து கொள்ள புதிய முறைமை அறிமுகம்!

Chithra / Feb 11th 2025, 7:11 am
image

 

மின்வெட்டு இடம்பெறும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பொன்றை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துகொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மின்சார சபையின் தொலைபேசி செயலி மூலம் அல்லது 1987 என்ற தொலைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துகொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துகொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு, இன்று ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.

இதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், இவ்வாறு ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்து கொள்ள புதிய முறைமை அறிமுகம்  மின்வெட்டு இடம்பெறும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பொன்றை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துகொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.மின்சார சபையின் தொலைபேசி செயலி மூலம் அல்லது 1987 என்ற தொலைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துகொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.இதேவேளை, மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துகொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு, இன்று ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.இதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், இவ்வாறு ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now