• Nov 21 2024

இலங்கைக்கு நுழைந்த புதிய வைரஸ் - மீண்டும் ஆரம்பிக்கப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை! மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Dec 28th 2023, 8:08 am
image

 

ஜே.என் வன் (JN1) ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் 19 வைத்தியசாலைகளில், இது தொடர்பான மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.என் வன் ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு உலகின் 41 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், மிகவும் வேகமாக பரவி வருகின்றது.

இந்த வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் இதுவரை 7,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளானோருக்கு தொடர்ச்சியான இருமல், சுவை மற்றும் வாசனை இழப்பு, அதிக காய்ச்சல், சோர்வு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டில் மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதேவேளை  

கொவிட் 19 வைரஸின் ஜே.என் 1 உப வகை தொடர்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை விரைவாக பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் வைரஸ் தொற்றின் புதிய வகை தொற்றான ஜே.என் 1நாட்டுக்குள் நுழைந்திருப்பதாக நம்புகிறோம். 

அதனால் விமான நிலையத்தில் இது தொடர்பாக அறிவுறுத்தும் நடவடிக்கை மற்றும் பரிசோதனை நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் முகக்வசம் அணிவது, கைகளை கழுவுவது போன்ற சுகாதார செயற்படுகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு விரைவாக அறிவுறுத்த வேண்டும் என்றார்.

இலங்கைக்கு நுழைந்த புதிய வைரஸ் - மீண்டும் ஆரம்பிக்கப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை மக்களுக்கு அவசர எச்சரிக்கை  ஜே.என் வன் (JN1) ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டின் 19 வைத்தியசாலைகளில், இது தொடர்பான மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜே.என் வன் ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு உலகின் 41 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், மிகவும் வேகமாக பரவி வருகின்றது.இந்த வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் இதுவரை 7,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளானோருக்கு தொடர்ச்சியான இருமல், சுவை மற்றும் வாசனை இழப்பு, அதிக காய்ச்சல், சோர்வு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டில் மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.இதேவேளை  கொவிட் 19 வைரஸின் ஜே.என் 1 உப வகை தொடர்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை விரைவாக பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,கொவிட் வைரஸ் தொற்றின் புதிய வகை தொற்றான ஜே.என் 1நாட்டுக்குள் நுழைந்திருப்பதாக நம்புகிறோம். அதனால் விமான நிலையத்தில் இது தொடர்பாக அறிவுறுத்தும் நடவடிக்கை மற்றும் பரிசோதனை நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முகக்வசம் அணிவது, கைகளை கழுவுவது போன்ற சுகாதார செயற்படுகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு விரைவாக அறிவுறுத்த வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement