• Apr 26 2024

நியூசிலாந்து அணி அபார வெற்றி..! SamugamMedia

Chithra / Mar 25th 2023, 1:14 pm
image

Advertisement


இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஒக்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனக்க முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதனடிப்படையில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல ஆட்டமிழப்புகளையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்ப்பில் பின் ஆலன் 51 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரன் 49 ஓட்டங்களையும், டாரில் மிட்செல் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சமிக கருணாரத்ன 4 ஆட்டமிழப்புகளையும் , கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 ஆட்டமிழப்புகளையும் கைப்பற்றினர்.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் இலங்கையணி ஆரம்பம் முதலே ஆட்டமிழப்புகளை பறிகொடுத்தது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் அதிகபட்சமாக 18 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 76 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்து தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து அணி அபார வெற்றி. SamugamMedia இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.ஒக்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனக்க முதலில் பந்துவீச தீர்மானித்தார்.அதனடிப்படையில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல ஆட்டமிழப்புகளையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்ப்பில் பின் ஆலன் 51 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரன் 49 ஓட்டங்களையும், டாரில் மிட்செல் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் சமிக கருணாரத்ன 4 ஆட்டமிழப்புகளையும் , கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 ஆட்டமிழப்புகளையும் கைப்பற்றினர்.வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் இலங்கையணி ஆரம்பம் முதலே ஆட்டமிழப்புகளை பறிகொடுத்தது.இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் அதிகபட்சமாக 18 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.இறுதியில் இலங்கை அணி 76 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்து தோல்வியை தழுவியது.

Advertisement

Advertisement

Advertisement