• May 07 2024

காந்தி தத்துவத்துக்கு இழைத்த துரோகம்- ராகுல் காந்திக்கு அமெரிக்க எம்.பி. ஆதரவு SamugamMedia

Chithra / Mar 25th 2023, 1:09 pm
image

Advertisement

காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பிறக்கப்பட்டு உள்ளது. மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு கோர்ட்டு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பதை கண்டித்து போராட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு அமெரிக்க எம்.பி. ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி. ரோகன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றியது காந்திய தத்துவத்துக்கும், இந்தியாவின் ஆழமான மதிப்புகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகமாகும். என் தாத்தா பல வருடங்கள் சிறையில் தியாகம் செய்தது இதற்காக அல்ல.

இந்திய ஜனநாயகத்திற்காக இந்த முடிவை மாற்ற உங்களுக்கு (பிரதமர் மோடி) அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளார்.

இதே போல் அமெரிக்காவின் இந்தியன் ஓவர்சீஸ் பாராளுமன்ற துணைத் தலைவர் ஜார்ஜ் ஆபிரகாம் கூறும்போது, ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு இது ஒரு சோகமான நாள். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் பிரதமர் மோடி அரசு எல்லா இடங்களிலும் உள்ள இந்தியர்களின் பேச்சுரிமை மற்றும் சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்கிறது. 

தேர்தல் பிரசாரத்தில் ஒரு கருத்துக்கு எதிராக கோர்ட்டு வழக்கை கொண்டு வருவது வெட்கக்கேடானது என்றார்.

காந்தி தத்துவத்துக்கு இழைத்த துரோகம்- ராகுல் காந்திக்கு அமெரிக்க எம்.பி. ஆதரவு SamugamMedia காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பிறக்கப்பட்டு உள்ளது. மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு கோர்ட்டு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பதை கண்டித்து போராட்டங்கள் நடந்தன.இந்த நிலையில் ராகுல் காந்திக்கு அமெரிக்க எம்.பி. ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி. ரோகன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றியது காந்திய தத்துவத்துக்கும், இந்தியாவின் ஆழமான மதிப்புகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகமாகும். என் தாத்தா பல வருடங்கள் சிறையில் தியாகம் செய்தது இதற்காக அல்ல.இந்திய ஜனநாயகத்திற்காக இந்த முடிவை மாற்ற உங்களுக்கு (பிரதமர் மோடி) அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளார்.இதே போல் அமெரிக்காவின் இந்தியன் ஓவர்சீஸ் பாராளுமன்ற துணைத் தலைவர் ஜார்ஜ் ஆபிரகாம் கூறும்போது, ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு இது ஒரு சோகமான நாள். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் பிரதமர் மோடி அரசு எல்லா இடங்களிலும் உள்ள இந்தியர்களின் பேச்சுரிமை மற்றும் சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் ஒரு கருத்துக்கு எதிராக கோர்ட்டு வழக்கை கொண்டு வருவது வெட்கக்கேடானது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement