• May 10 2025

அமெரிக்க தீர்வை வரி குறித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை; வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதி!

Chithra / May 9th 2025, 9:04 am
image


அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி தொடர்பான அடுத்தககட்ட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதியளித்துள்ளதென நிதி பிரதி அமைச்சர்  ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.

இதுதொடர்பில் நாடாளுமன்றில் நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில் 

பொருளாதாரம் ஸ்திரமடைந்ததால் தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தனியார் தரப்பினர் பெருமளவிலான வாகனங்களை தற்போது இறக்குமதி செய்துள்ளனர்.

நிறைவடைந்த 6 மாத காலத்தில் பொருளாதாரம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.  அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யாக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வெளிநாட்டு  கையிருப்பு  6.5 பில்லியன் டொலர்களாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தாண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 7 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அரச மற்றும் தனியார் தொழில் முயற்சியாண்மை மேம்பாட்டுக்குரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆண்டு  அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி  விவகாரத்தில் இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை பெற்றுக்கொள்வோம் என்றார்.

அமெரிக்க தீர்வை வரி குறித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை; வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதி அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி தொடர்பான அடுத்தககட்ட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதியளித்துள்ளதென நிதி பிரதி அமைச்சர்  ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.இதுதொடர்பில் நாடாளுமன்றில் நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில் பொருளாதாரம் ஸ்திரமடைந்ததால் தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.தனியார் தரப்பினர் பெருமளவிலான வாகனங்களை தற்போது இறக்குமதி செய்துள்ளனர்.நிறைவடைந்த 6 மாத காலத்தில் பொருளாதாரம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.  அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யாக்கப்பட்டுள்ளன.நாட்டின் வெளிநாட்டு  கையிருப்பு  6.5 பில்லியன் டொலர்களாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 7 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.அரச மற்றும் தனியார் தொழில் முயற்சியாண்மை மேம்பாட்டுக்குரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆண்டு  அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி  விவகாரத்தில் இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை பெற்றுக்கொள்வோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement