• Oct 30 2026

சகல தரப்பு குற்றச்சாட்டுகளுடன் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - எஸ்.எம். மறிக்கார் !

Ziya / Oct 29th 2026, 9:38 am
image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகருக்கு எதிராக, அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் ரீதியில் கையாளுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய 50 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று 44 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினால் கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மறிக்கார் தெரிவித்தார்.


எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான காரியாலயத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:

"சபாநாயகருக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உள்ள நிலையில், அரச நிர்வாக அமைச்சுக்குச் சொந்தமான மற்றொரு பல மாடிக் குடியிருப்பை உபயோகித்தல், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்த தளபாடங்களை அங்கு எடுத்துச் செல்லுதல், பாராளுமன்றத்தின் இரண்டாவது மாடியில் உள்ள உணவகத்தில் தனது செயலாளருடன் எவ்வித கட்டணமுமின்றி உணவு மற்றும் பானங்களைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக நிதி நட்டத்தை ஏற்படுத்தியமை மற்றும் இதற்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருந்த ஊடகப் பிரிவை, தனியார் ஊடக நிறுவனங்களுடன் நடத்தும் நேர்காணல்களுக்காக சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட பலத்த குற்றச்சாட்டுகள் 50 இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடங்கியுள்ளன.


இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டவுடன் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டபோதிலும், பின்னர் அதனை சட்ட மா அதிபருக்கு அனுப்ப வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால் விவாதிக்க முடியாது எனவும் கூறி அரசாங்கம் அதனைத் தவிர்க்க முயற்சித்தது. 


நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ட மாத்திரத்திலோ அல்லது அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்படாத சந்தர்ப்பத்திலோ வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்ற ஒரு விடயமாகும். 


அதேபோன்று, பாராளுமன்றத்தின் இறைமையை மாற்றுவதற்கு எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையினாலும் முடியாது. 


எவ்வாறாயினும், இந்தப் பிரேரணையின் ஒரு எழுத்து, வாக்கியம் அல்லது குற்றச்சாட்டைக்கூட வாபஸ் பெற ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தயாராக இல்லை.


 எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின்படி இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாவிட்டால், குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவோம். 


அரசாங்கத்திற்கு 159 பெரும்பான்மை பலம் இருப்பினும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் உள்வீட்டு முரண்பாடுகளும் பிளவுகளும் சமூகத்திற்கு வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தினாலேயே அரசாங்கம் இதனை விவாதத்திற்கு எடுப்பதைத் தவிர்த்து வருகிறது.


 பதவியேற்று 25 மாதங்கள் கடந்த நிலையில் அரசாங்கத்தின் மக்கள் பலம் முற்றிலுமாகச் சரிந்துபோயுள்ளது.


மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்ட போதிலும், இன்று அதைவிடவும் கடுமையான அடக்குமுறைச் சட்டமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. 


அந்தச் சட்டத்தில் பயங்கரவாதப் பிரசுரம் என்பது முறையாக வரையறுக்கப்படவில்லை. நீதவான் ஒருவரால் கூட பிணை வழங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் நபர்களை இரண்டு மாதங்கள் தடுத்து வைத்திருப்பதற்கும், சுயாதீனமானவை எனக் கூறப்படும் மதிப்பீட்டுக் குழுக்களுக்குத் தமது அரசியல் ஆதரவாளர்களை நியமிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அத்துடன், பொலிஸ் அதிகாரங்கள் முப்படையினருக்கும் கடலோரப் பாதுகாப்புப் படைக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், காவலில் உள்ளவர்கள் சட்ட உதவி பெறுவதோ அல்லது காணொளிப் பதிவுகளை மேற்கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.


 அதுமட்டுமின்றி, நீதிமன்ற அனுமதியின்றி 24 மணித்தியாலங்கள் கூட்டங்களை நடத்துவதைத் தடை செய்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக 2027 ஜனவரிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP Plus) சலுகையை இழக்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. 


மேலும், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினரும் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். நாட்டின் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் சீர்குலைந்துள்ளதால் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரோ அல்லது டொலரோ நாட்டுக்குள் வருவதில்லை. 


போர்ட் சிட்டி (Port City) திட்டத்தின் 500 மில்லியன் டொலர் செயற்திட்டங்கள், எச்.எஸ்பி.சி (HSBC) நிறுவனம் மற்றும் சீனா முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றன. 


டொலர் வருமானம் இழக்கப்பட்டமையினால் இறக்குமதி - ஏற்றுமதி இடைவெளி அதிகரித்து, எரிவாயு வரிசைகள் உருவாகி, மின்கட்டணம் 50 வீதத்தால் உயர்த்தப்பட்டு, மக்கள் தங்க நகைகளை அடகுவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 


5 ஆண்டுகள் வழங்குமாறு கூறிய தலைவர்கள் இன்று நாட்டை 50 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, கடந்த காலத்தில் தடுப்புக் காவலில் இருப்பவர்கள் மரணிப்பது தொடர்பாக ஜனநாயகம் குறித்துப் பேசிய தரப்பினர், இன்று ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் மௌனித்துத் தப்பியோடி வருகின்றனர்." என‌ மேலும் தெரிவித்தார்.

சகல தரப்பு குற்றச்சாட்டுகளுடன் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - எஸ்.எம். மறிக்கார் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகருக்கு எதிராக, அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் ரீதியில் கையாளுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய 50 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று 44 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினால் கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மறிக்கார் தெரிவித்தார்.எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான காரியாலயத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:"சபாநாயகருக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உள்ள நிலையில், அரச நிர்வாக அமைச்சுக்குச் சொந்தமான மற்றொரு பல மாடிக் குடியிருப்பை உபயோகித்தல், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்த தளபாடங்களை அங்கு எடுத்துச் செல்லுதல், பாராளுமன்றத்தின் இரண்டாவது மாடியில் உள்ள உணவகத்தில் தனது செயலாளருடன் எவ்வித கட்டணமுமின்றி உணவு மற்றும் பானங்களைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக நிதி நட்டத்தை ஏற்படுத்தியமை மற்றும் இதற்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருந்த ஊடகப் பிரிவை, தனியார் ஊடக நிறுவனங்களுடன் நடத்தும் நேர்காணல்களுக்காக சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட பலத்த குற்றச்சாட்டுகள் 50 இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடங்கியுள்ளன.இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டவுடன் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டபோதிலும், பின்னர் அதனை சட்ட மா அதிபருக்கு அனுப்ப வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால் விவாதிக்க முடியாது எனவும் கூறி அரசாங்கம் அதனைத் தவிர்க்க முயற்சித்தது. நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ட மாத்திரத்திலோ அல்லது அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்படாத சந்தர்ப்பத்திலோ வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்ற ஒரு விடயமாகும். அதேபோன்று, பாராளுமன்றத்தின் இறைமையை மாற்றுவதற்கு எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையினாலும் முடியாது. எவ்வாறாயினும், இந்தப் பிரேரணையின் ஒரு எழுத்து, வாக்கியம் அல்லது குற்றச்சாட்டைக்கூட வாபஸ் பெற ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தயாராக இல்லை. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின்படி இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாவிட்டால், குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவோம். அரசாங்கத்திற்கு 159 பெரும்பான்மை பலம் இருப்பினும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் உள்வீட்டு முரண்பாடுகளும் பிளவுகளும் சமூகத்திற்கு வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தினாலேயே அரசாங்கம் இதனை விவாதத்திற்கு எடுப்பதைத் தவிர்த்து வருகிறது. பதவியேற்று 25 மாதங்கள் கடந்த நிலையில் அரசாங்கத்தின் மக்கள் பலம் முற்றிலுமாகச் சரிந்துபோயுள்ளது.மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்ட போதிலும், இன்று அதைவிடவும் கடுமையான அடக்குமுறைச் சட்டமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் பயங்கரவாதப் பிரசுரம் என்பது முறையாக வரையறுக்கப்படவில்லை. நீதவான் ஒருவரால் கூட பிணை வழங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் நபர்களை இரண்டு மாதங்கள் தடுத்து வைத்திருப்பதற்கும், சுயாதீனமானவை எனக் கூறப்படும் மதிப்பீட்டுக் குழுக்களுக்குத் தமது அரசியல் ஆதரவாளர்களை நியமிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பொலிஸ் அதிகாரங்கள் முப்படையினருக்கும் கடலோரப் பாதுகாப்புப் படைக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், காவலில் உள்ளவர்கள் சட்ட உதவி பெறுவதோ அல்லது காணொளிப் பதிவுகளை மேற்கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நீதிமன்ற அனுமதியின்றி 24 மணித்தியாலங்கள் கூட்டங்களை நடத்துவதைத் தடை செய்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக 2027 ஜனவரிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP Plus) சலுகையை இழக்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினரும் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். நாட்டின் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் சீர்குலைந்துள்ளதால் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரோ அல்லது டொலரோ நாட்டுக்குள் வருவதில்லை. போர்ட் சிட்டி (Port City) திட்டத்தின் 500 மில்லியன் டொலர் செயற்திட்டங்கள், எச்.எஸ்பி.சி (HSBC) நிறுவனம் மற்றும் சீனா முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றன. டொலர் வருமானம் இழக்கப்பட்டமையினால் இறக்குமதி - ஏற்றுமதி இடைவெளி அதிகரித்து, எரிவாயு வரிசைகள் உருவாகி, மின்கட்டணம் 50 வீதத்தால் உயர்த்தப்பட்டு, மக்கள் தங்க நகைகளை அடகுவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகள் வழங்குமாறு கூறிய தலைவர்கள் இன்று நாட்டை 50 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, கடந்த காலத்தில் தடுப்புக் காவலில் இருப்பவர்கள் மரணிப்பது தொடர்பாக ஜனநாயகம் குறித்துப் பேசிய தரப்பினர், இன்று ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் மௌனித்துத் தப்பியோடி வருகின்றனர்." என‌ மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement