திருகோணமலை குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களில் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது உறுதிப்பட்டிருந்தால், அந்த மக்களுக்காக அதனை பாதுகாத்து வழங்க நடவடிக்கை எடுப்போம்.காணிகளை பலாத்காரமாக பிடித்துக்கொள்ள யாருக்கும் இடமளிப்பதில்லை என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எழுப்பிய கேள்யொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இம்ரான் மஹ்ரூப் தெரிவிக்கையில், குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களில் மதகுரு ஒருவர் அண்மைக்காலமாக மக்களுக்கு சொந்தமான காணிகளை அத்துமீறி பிடிக்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகிறது.
இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுத்துச்செல்கிறன்போது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது மாத்திரமல்ல, நாட்டில் இன ரீதியான பிரச்சினைக்கும் காரணமாக அமைகிறது.
அதனால் இந்த மதகுருவின் செயற்பாடுகள் தொடர்பில் காணி அமைச்சர் என்றவகையில் அறிந்திருக்கிறீர்களா அல்லது இவரின் இந்த செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்றார்.
இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேசங்களில் காணி அபகரிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை.
உத்தியோகபூர்வமற்ற முறையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் பிரகாரமே எமக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது.
இருந்தபோதும் அரசாங்கம் என்றவகையில் காணிகளை பலாத்காரமாக பிடித்துக்கொள்ள யாருக்கும் இடமளிப்பதில்லை என்பதே எனது நிலைப்பாடு.
என்றாலும் குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேசங்களில் காணி அபகரிப்பு இடம்பெறுவது தொடர்பில் உங்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேடிப்பார்த்து, அதன் உண்மைத்தன்மை தொடர்பாக அமைச்சின் செயலாளர் ஊடாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொண்டு அறியத்தருகிறேன்.
அத்துடன் அந்த பிரதேசங்களில் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது உறுதிப்பட்டிருந்தால், அந்த மக்களுக்காக அதனை பாதுகாத்து வழங்க நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். என்றார்.
காணி அபகரிப்புகளுக்கு எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை அமைச்சர் சபையில் உறுதி samugammedia திருகோணமலை குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களில் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது உறுதிப்பட்டிருந்தால், அந்த மக்களுக்காக அதனை பாதுகாத்து வழங்க நடவடிக்கை எடுப்போம்.காணிகளை பலாத்காரமாக பிடித்துக்கொள்ள யாருக்கும் இடமளிப்பதில்லை என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எழுப்பிய கேள்யொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இம்ரான் மஹ்ரூப் தெரிவிக்கையில், குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களில் மதகுரு ஒருவர் அண்மைக்காலமாக மக்களுக்கு சொந்தமான காணிகளை அத்துமீறி பிடிக்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகிறது.இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுத்துச்செல்கிறன்போது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது மாத்திரமல்ல, நாட்டில் இன ரீதியான பிரச்சினைக்கும் காரணமாக அமைகிறது.அதனால் இந்த மதகுருவின் செயற்பாடுகள் தொடர்பில் காணி அமைச்சர் என்றவகையில் அறிந்திருக்கிறீர்களா அல்லது இவரின் இந்த செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்றார்.இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்,குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேசங்களில் காணி அபகரிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை.உத்தியோகபூர்வமற்ற முறையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் பிரகாரமே எமக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது.இருந்தபோதும் அரசாங்கம் என்றவகையில் காணிகளை பலாத்காரமாக பிடித்துக்கொள்ள யாருக்கும் இடமளிப்பதில்லை என்பதே எனது நிலைப்பாடு.என்றாலும் குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேசங்களில் காணி அபகரிப்பு இடம்பெறுவது தொடர்பில் உங்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேடிப்பார்த்து, அதன் உண்மைத்தன்மை தொடர்பாக அமைச்சின் செயலாளர் ஊடாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொண்டு அறியத்தருகிறேன்.அத்துடன் அந்த பிரதேசங்களில் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது உறுதிப்பட்டிருந்தால், அந்த மக்களுக்காக அதனை பாதுகாத்து வழங்க நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். என்றார்.