• May 17 2024

வடகிழக்கு கடற்றொழிலாளர்களும் நாளைய ஹர்தாலுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும்..! அன்னராசா கோரிக்கை samugammedia

Chithra / Apr 24th 2023, 6:59 pm
image

Advertisement

வடகிழக்கு வாழ் மீனவர்களையும் அவர்களின் ஜனநாயக குரல்வளையினையும்  நசுக்குவதற்காக இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பயன்படுத்தபடும் ஆகவே வடகிழக்கு கடற்றொழிலாளர்கள் நாளைய தினம் தமது தொழில்களை புறக்கணித்து சந்தைகளை இடைநிறுத்தி பூரண ஹர்தாலிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் முன்னாள் தலைவரும் ஊர்க்வற்துறை கடற்றொழிலாளர் சமாசத்தின் செயலாளருமான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தம் ஊடக சந்திப்பினை ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடமாகாணத்தில் இருக்கின்ற கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் மக்கள் விரும்பாத மக்களினுடைய குரல்வளைகளை நசுக்குகின்ற அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்த்து நாளைய தினம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய தமிழ் கட்சிகள் முன்னெடுக்கின்ற இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் கிராமிய அமைப்புக்கள் ஏனைய கடற்றொழிலாளர்கள் அமைப்புகள் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது, இது கட்டாயமானதாகவும் காணப்படுகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச அதிகாரிகளினாலும் இந்த அரசாங்கத்தினாலும் மீனவர் சமுதாயத்தின் மீனவர்களினுடைய குரல்வலைகள் நசுக்கப்படுகின்றன. 

ஆகவே நசுக்கப்படுகின்ற பொழுதே நாங்கள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் நசுக்கிய பின்னர் நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்க முடியாது. 

அனைத்து கடற்தொழிலாளர்களையும் நாளைய தினம் எங்களுடைய கடலையும் கடல்வளத்தையும எங்களுடைய இருப்பையும் பாதுகாப்பதற்கு இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தை தகர்த்து எறிய தமிழ் கட்சிகள் ஓரணியில் முன்னெடுத்து இருக்கின்ற கதவடைப்பு போராட்டத்திற்கு நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்த ஆதரவினை வழங்கவேண்டும்.

மேலும்  தொழில்களை நிறுத்தி  இந்த போராட்டத்திற்கு ஆதரவினை கொடுக்க வேண்டிய கடப்பாடும் தேவையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. எங்களைக் காப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகின்றது. 

நாங்கள் கடற்தொழில் சமூகமாக எங்களுடைய பூரண ஆதரவினையும்  மேலும் ஒரு கோரிக்கையினையும் இதனூடாக முன்வைக்கின்றேன்.

எங்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் கூட நாங்கள் எவ்வளவோ அசௌகரியங்களையும் துன்பங்களையும் கடந்து வந்த இனம். இனியும் அவ்வாறான அசௌகரியங்களை அரசாங்கம் திணிப்பதனை அப்படியே ஏற்று நாங்கள் செல்லாது.

அதனை எதிர்த்து வடகிழக்கு தழுவிய கர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறு வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 50,000 கடற்றொழிலாளர் குடும்பங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு கடற்றொழிலாளர்களும் நாளைய ஹர்தாலுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும். அன்னராசா கோரிக்கை samugammedia வடகிழக்கு வாழ் மீனவர்களையும் அவர்களின் ஜனநாயக குரல்வளையினையும்  நசுக்குவதற்காக இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பயன்படுத்தபடும் ஆகவே வடகிழக்கு கடற்றொழிலாளர்கள் நாளைய தினம் தமது தொழில்களை புறக்கணித்து சந்தைகளை இடைநிறுத்தி பூரண ஹர்தாலிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் முன்னாள் தலைவரும் ஊர்க்வற்துறை கடற்றொழிலாளர் சமாசத்தின் செயலாளருமான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் இன்றைய தம் ஊடக சந்திப்பினை ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் இருக்கின்ற கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் மக்கள் விரும்பாத மக்களினுடைய குரல்வளைகளை நசுக்குகின்ற அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்த்து நாளைய தினம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய தமிழ் கட்சிகள் முன்னெடுக்கின்ற இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் கிராமிய அமைப்புக்கள் ஏனைய கடற்றொழிலாளர்கள் அமைப்புகள் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது, இது கட்டாயமானதாகவும் காணப்படுகிறது.வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச அதிகாரிகளினாலும் இந்த அரசாங்கத்தினாலும் மீனவர் சமுதாயத்தின் மீனவர்களினுடைய குரல்வலைகள் நசுக்கப்படுகின்றன. ஆகவே நசுக்கப்படுகின்ற பொழுதே நாங்கள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் நசுக்கிய பின்னர் நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்க முடியாது. அனைத்து கடற்தொழிலாளர்களையும் நாளைய தினம் எங்களுடைய கடலையும் கடல்வளத்தையும எங்களுடைய இருப்பையும் பாதுகாப்பதற்கு இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தை தகர்த்து எறிய தமிழ் கட்சிகள் ஓரணியில் முன்னெடுத்து இருக்கின்ற கதவடைப்பு போராட்டத்திற்கு நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்த ஆதரவினை வழங்கவேண்டும்.மேலும்  தொழில்களை நிறுத்தி  இந்த போராட்டத்திற்கு ஆதரவினை கொடுக்க வேண்டிய கடப்பாடும் தேவையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. எங்களைக் காப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகின்றது. நாங்கள் கடற்தொழில் சமூகமாக எங்களுடைய பூரண ஆதரவினையும்  மேலும் ஒரு கோரிக்கையினையும் இதனூடாக முன்வைக்கின்றேன்.எங்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் கூட நாங்கள் எவ்வளவோ அசௌகரியங்களையும் துன்பங்களையும் கடந்து வந்த இனம். இனியும் அவ்வாறான அசௌகரியங்களை அரசாங்கம் திணிப்பதனை அப்படியே ஏற்று நாங்கள் செல்லாது.அதனை எதிர்த்து வடகிழக்கு தழுவிய கர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறு வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 50,000 கடற்றொழிலாளர் குடும்பங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement