• May 23 2024

அனைத்து இந்து மக்களும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும்..! இந்து இளைஞர் பேரவை வேண்டுகோள் samugammedia

Chithra / Apr 24th 2023, 6:48 pm
image

Advertisement

நாளை வடக்கு கிழக்கிலே பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. இதன் தன்மையை உணர்ந்து அனைத்து இந்து மக்களும் இதற்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

குறித்த பேரவையின் செய்திக் குறிப்பில்,

எதிர்வரும் 25ம் திகதியன்று நடைபெறும் ஹர்த்தாலுக்கு அனைத்து இந்து தமிழ் மக்களும் தங்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும். வர்த்தக நிலையங்கள் மூடப்படல் வேண்டும், போக்குவரத்துகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

இக்ஹர்த்தாலானது எமது நாட்டில் தற்போது கொண்டுவரப்படுகின்ற புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது எமது மக்களுக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமையை பறிக்கும் விதத்தில் மிகக் கொடூரமான சரத்துகளைக் கொண்டதாக இருக்கின்றது. 

அதிலிருந்து எமது மக்கள் பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டுமாக இருந்தால் அச்சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படுகின்ற போது அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அந்தச் சட்ட மூலத்தை நிறுத்துவதற்காக எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதரவாகவே இக்கர்த்தால் அமைகின்றது.

அதேநேரத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் என்ற வகையில் இந்துத் தமிழ் மக்களின் வாழிடங்கள் திட்டமிட்டு பௌத்த துறவிகளாலும், இராணுவத்தினாலும், அரசாங்கத்தினாலும் சுவீகரிக்கப்படுகின்றது. இவற்றை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். 

வடக்கு கிழக்கு எங்கள் சொந்த மண் அதற்காகப் பல தியாகங்கள் நடைபெற்றன. அவ்வாறான தியாகங்களை நிலைப்படுத்த வேண்டுமாக இருந்தால் நாங்கள் எங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும். 


வடக்கு கிழக்கிலே இந்த சிங்கள பேரினவாத அரசானது இராணுவத்தினரைப் பயன்படுத்தி இந்துத் தமிழ் மக்களின் வாழிடங்கள், பூர்வீக இந்து ஆலயங்களின் அமைவிடங்கள் உட்பட பல இடங்களைப் தொல்பொருள் என்ற பெயரில் அடையாளப் படுத்தி தங்களுக்குள் உட்படுத்துகின்றார்கள். இதனைத் தடுத்து நிறுத்தக் கொரியும் இந்த கர்த்தாக் அமைகின்றது. 

இதேவளையில் மகாவலி அபிவிருத்தி, வனபரிபாலனம், வன வளம் என்ற ரீதியிலும் வடக்கு கிழக்கில் இருக்கின்ற காணிகளத் தங்கள் வசம் வைத்துக் கொண்டு எங்கள் மக்களின் இருப்பிடங்களையும் சுவீகரிக்கின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

இவற்றுக்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து 25ம் திகதி இடம்பெறுகின்ற ஹர்த்தாலுக்கு எமது அனைத்து இந்துத் தமிழ் மக்களும் பூரண ஆதரவை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.-  என்றுள்ளது.

அனைத்து இந்து மக்களும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும். இந்து இளைஞர் பேரவை வேண்டுகோள் samugammedia நாளை வடக்கு கிழக்கிலே பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. இதன் தன்மையை உணர்ந்து அனைத்து இந்து மக்களும் இதற்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.குறித்த பேரவையின் செய்திக் குறிப்பில்,எதிர்வரும் 25ம் திகதியன்று நடைபெறும் ஹர்த்தாலுக்கு அனைத்து இந்து தமிழ் மக்களும் தங்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும். வர்த்தக நிலையங்கள் மூடப்படல் வேண்டும், போக்குவரத்துகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.இக்ஹர்த்தாலானது எமது நாட்டில் தற்போது கொண்டுவரப்படுகின்ற புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது எமது மக்களுக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமையை பறிக்கும் விதத்தில் மிகக் கொடூரமான சரத்துகளைக் கொண்டதாக இருக்கின்றது. அதிலிருந்து எமது மக்கள் பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டுமாக இருந்தால் அச்சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படுகின்ற போது அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அந்தச் சட்ட மூலத்தை நிறுத்துவதற்காக எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதரவாகவே இக்கர்த்தால் அமைகின்றது.அதேநேரத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் என்ற வகையில் இந்துத் தமிழ் மக்களின் வாழிடங்கள் திட்டமிட்டு பௌத்த துறவிகளாலும், இராணுவத்தினாலும், அரசாங்கத்தினாலும் சுவீகரிக்கப்படுகின்றது. இவற்றை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். வடக்கு கிழக்கு எங்கள் சொந்த மண் அதற்காகப் பல தியாகங்கள் நடைபெற்றன. அவ்வாறான தியாகங்களை நிலைப்படுத்த வேண்டுமாக இருந்தால் நாங்கள் எங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும். வடக்கு கிழக்கிலே இந்த சிங்கள பேரினவாத அரசானது இராணுவத்தினரைப் பயன்படுத்தி இந்துத் தமிழ் மக்களின் வாழிடங்கள், பூர்வீக இந்து ஆலயங்களின் அமைவிடங்கள் உட்பட பல இடங்களைப் தொல்பொருள் என்ற பெயரில் அடையாளப் படுத்தி தங்களுக்குள் உட்படுத்துகின்றார்கள். இதனைத் தடுத்து நிறுத்தக் கொரியும் இந்த கர்த்தாக் அமைகின்றது. இதேவளையில் மகாவலி அபிவிருத்தி, வனபரிபாலனம், வன வளம் என்ற ரீதியிலும் வடக்கு கிழக்கில் இருக்கின்ற காணிகளத் தங்கள் வசம் வைத்துக் கொண்டு எங்கள் மக்களின் இருப்பிடங்களையும் சுவீகரிக்கின்ற நிலைமையும் காணப்படுகின்றது.இவற்றுக்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து 25ம் திகதி இடம்பெறுகின்ற ஹர்த்தாலுக்கு எமது அனைத்து இந்துத் தமிழ் மக்களும் பூரண ஆதரவை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.-  என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement