• Jun 16 2024

மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு கோரிக்கை!

Anaath / May 23rd 2024, 1:44 pm
image

Advertisement

ஜனாதிபதியால்  திறந்து வைக்கப்படவுள்ள மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட இருக்கின்றது.

எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வருகை தந்து இந்த வைத்தியசாலையை திறந்து வைக்க இருக்கின்ற நிலைமையில் வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற பெயர் பலகையில் மாங்குளம் என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் இதனை மாற்றுமாறு பல தடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை அது மாற்றப்படவில்லை எனவும் எனவே திறப்பு விழாவுக்கு முன்னதாக  தமிழ் மொழியினை சரி  செய்து  பெயர்ப் பலகையினை மாற்றி திறப்பு விழாவினை நடாத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு கோரிக்கை ஜனாதிபதியால்  திறந்து வைக்கப்படவுள்ள மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட இருக்கின்றது.எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வருகை தந்து இந்த வைத்தியசாலையை திறந்து வைக்க இருக்கின்ற நிலைமையில் வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற பெயர் பலகையில் மாங்குளம் என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் இதனை மாற்றுமாறு பல தடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை அது மாற்றப்படவில்லை எனவும் எனவே திறப்பு விழாவுக்கு முன்னதாக  தமிழ் மொழியினை சரி  செய்து  பெயர்ப் பலகையினை மாற்றி திறப்பு விழாவினை நடாத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement