வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இரு சபைகளிலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரனிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.
ஆளுநருக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாண வருடாந்த ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக 2025/2026 ஆம் ஆண்டுக்குரிய வலயங்களுக்கு இடையிலான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டு இடமாற்ற சபை அமைக்கப்பட்டு அதற்கான முதல் அமர்வு 13.08.2025 இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பாக ஏ.தீபன் திலீசன், தமிழர் ஆசிரியர் சங்கம் சார்பாக கே.இந்திரன், ஆசிரியர் விடுதலை முன்னணி சார்பாக என்.செல்வராசா, இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம் சார்பாக கே.பிரகாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். கலந்துரையாடல் ஆரம்பிக்கும்போதே ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளால் 2024/2025ஆம் ஆண்டுக்கான சில இடமாற்றங்கள் தொடர்பான தீர்வுகள் பற்றி கலந்துரையாடிய பின்னரே 2025/2026ஆம் ஆண்டுக்கான இடமாற்றம் ஆராயப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
18.08.2025 அன்று அதற்கமைவாக விசேட மேன்முறையீட்டு சபைக்கூட்டம் நடாத்தப்பட்டு 2024/2025ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவைகருதிய இடமாற்ற மேன்முறையீடுகள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர் திருமதி.என்.என்.ராஜசேகரன் என்பவரது மேன்முறையீடு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது கணவருக்கு ஒரு கண் முற்றாக பார்வையில்லை எனவும் மறு கண்ணுக்கு தினமும் கண்வில்லை பொருத்துவதற்கு குறித்த ஆசிரியரது உதவி தேவைப்படுவதால் அவரது இடமாற்றத்தை இரத்து செய்யவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் கலந்து கொண்ட சோ.காண்டீபராசாவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் இவ்விடயத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவற்றை பரிசீலனை செய்து இறுதித்தீர்மானம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இம்முடிவை மேன்முறையீட்டு சபை ஏகமனதாக தீர்மானித்திருந்ததுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பாக கலந்து கொண்ட சோ.காண்டீபராசா அவர்களும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இடமாற்ற சபை அமர்வுகளை தொடர முடிந்தது.
அதன் பின்னர் 2025/2026 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற சபை கூட்டப்பட்டு இடமாற்றம் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு 08.09.2025, 11.09.2025, 16.09.205, 17.09.2025, 19.09.2025, 23.09.2025 ஆகிய தினங்களில் இடமாற்ற விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
இதற்கிடையில் 17.09.2025 அன்று இடம்பெற்ற விசேட மேன்முறையீட்டு சபைக்கூட்டத்தில் குறித்த ஆசிரியர் திருமதி.என்.என்.ராஜசேகரன் அவர்களுடைய மேன்முறையீடு தொடர்பாக ஆராய்ந்தபோது கண்வில்லை பொருத்துவது தொடர்பாக தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்பவியலாளரால் வழங்கப்பட்ட கடிதமே சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் கண்மருத்துவரின் உறுதிப்படுத்தல் காணப்படாமையால் இறுதித்தீர்மானம் எட்டப்படவில்லை. இக்கூட்டத்திலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சோ.காண்டீபராசா அவர்கள் கலந்துகொண்டிருந்தார். மீண்டும் 23.09.2025 அன்று இடம்பெற்ற இடமாற்ற சபை அமர்விலும் சோ.காண்டீபராசா கலந்துகொண்டிருந்தார்.
பின்னர் மாகாணக்கல்விப் பணிப்பாளரான எனது பணிப்புரைக்கு அமைய மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் குறித்த ஆசிரியர் திருமதி.என்.என்.ராஜசேகரன் அவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதன் அடிப்படையில் கண்மருத்துவரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை சமர்ப்பிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டு அக்கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தை மேன்முறையீட்டுச் சபைக் கூட்டத்துக்கு சமர்ப்பிக்க வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதி சோ.காண்டீபராசா, மாகாணக் கல்விப் பணிப்பாளரான என்னிடமும், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளரிடமும் கோரியிருந்தார். மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக அது சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நாம் தெரிவித்திருந்தோம்.
24.09.2025 அன்று இடம்பெற்ற மேன்முறையீட்டு சபைக்கூட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கப்பிரதிநிதி சோ.காண்டீபராசா அவர்கள் குறித்த ஆசிரியரது இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரியபோது அவ்வாசிரியருக்கு அல்லாது அவரது கணவருக்கே குறித்த பிரச்சினை காணப்படுவதாலும் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தின் மூலம் ஏற்கனவே வெளிமாவட்டத்துக்கு மாற்றம் பெற்றுச்சென்ற இதை ஒத்த பிரச்சினை உள்ள ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்காத வகையிலும் அவருக்கு இலகுவாக போக்குவரத்து செய்யக்கூடிய கிளிநொச்சி வடக்கு வலயப் பாடசாலைக்கு இடமாற்றத்தை வழங்கலாம் என மேன்முறையீட்டு சபைத் தலைவர் என்ற வகையில் என்னால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இக்கருத்துக்கு இலங்கை ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்திருந்தபோதும் இலங்கை ஆசிரியர் சங்கப்பிரதிநிதி சோ.காண்டீபராசா அவர்கள் அதை ஏற்க மறுத்து குறித்த ஆசிரியரது இடமாற்றத்தை இரத்துச் செய்யாத காரணத்தால் தமது ஆசிரியர் சங்கம் இடமாற்ற சபை செயற்பாடுகளில் இருந்து விலகுவதாக கருத்தை பதிவு செய்து கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இவ்விடம் தொடர்பாக ஏனைய மூன்று ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளும் தமது கருத்தை பதிவு செய்திருந்தனர்.
பின்னர் குறித்த மூன்று ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் ஆசிரியர் திருமதி.என்.என்.ராஜசேகரன் அவர்களுக்கு வவுனியா வடக்கு வலயத்துக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றத்தை கிளிநொச்சி வடக்கு வலயத்துக்கு வேறுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இடமாற்றச் செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொண்டபோதும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், இலங்கை ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆகிய ஏனைய மூன்று சங்கப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் 2025/2026ஆம் ஆண்டுக்கான ஆசிரிய இடமாற்ற சபை செயற்பாடுகளை தொடர்ந்து நடாத்துவது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் 26.09.2025, 29.09.2025, 01.10.2025, 02.10.2025 ஆகிய தினங்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பங்குபற்றுதல் இன்றி இடமாற்ற விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வலயக் கல்வி அலுவலகங்களால் சமர்ப்பிக்கப்பட்ட பதிலீட்டு பட்டியலின் பிரகாரம் பதிலீடுகள் வழங்கப்பட்டும் இடமாற்றப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. 07.10.2025ஆம் திகதி இடமாற்றசபை உறுப்பினர்களின் ஒப்பம் பெறப்பட்டு எனது அனுமதியுடன் இடமாற்றப்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
2025/2026 இற்கான இடமாற்ற சபை செயற்பாடுகளில் இலங்கை ஆசிரியர் சங்கம் 7 நாட்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்ததுடன் முதல் நாள் அமர்வில் ஏ.தீபன்திலீசன் அவர்களும் 4 நாட்கள் சோ.காண்டீபராசா அவர்களும் 2 நாட்கள் எஸ்.மதியழகன் அவர்களும் குறித்த சங்கம் சார்பாக கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது - என மாகாணக் கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை தொடர்பில் ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பித்த வடக்கு கல்விப் பணிப்பாளர் வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இரு சபைகளிலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரனிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.ஆளுநருக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,வடக்கு மாகாண வருடாந்த ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக 2025/2026 ஆம் ஆண்டுக்குரிய வலயங்களுக்கு இடையிலான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டு இடமாற்ற சபை அமைக்கப்பட்டு அதற்கான முதல் அமர்வு 13.08.2025 இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பாக ஏ.தீபன் திலீசன், தமிழர் ஆசிரியர் சங்கம் சார்பாக கே.இந்திரன், ஆசிரியர் விடுதலை முன்னணி சார்பாக என்.செல்வராசா, இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம் சார்பாக கே.பிரகாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். கலந்துரையாடல் ஆரம்பிக்கும்போதே ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளால் 2024/2025ஆம் ஆண்டுக்கான சில இடமாற்றங்கள் தொடர்பான தீர்வுகள் பற்றி கலந்துரையாடிய பின்னரே 2025/2026ஆம் ஆண்டுக்கான இடமாற்றம் ஆராயப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.18.08.2025 அன்று அதற்கமைவாக விசேட மேன்முறையீட்டு சபைக்கூட்டம் நடாத்தப்பட்டு 2024/2025ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவைகருதிய இடமாற்ற மேன்முறையீடுகள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர் திருமதி.என்.என்.ராஜசேகரன் என்பவரது மேன்முறையீடு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது கணவருக்கு ஒரு கண் முற்றாக பார்வையில்லை எனவும் மறு கண்ணுக்கு தினமும் கண்வில்லை பொருத்துவதற்கு குறித்த ஆசிரியரது உதவி தேவைப்படுவதால் அவரது இடமாற்றத்தை இரத்து செய்யவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் கலந்து கொண்ட சோ.காண்டீபராசாவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் இவ்விடயத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவற்றை பரிசீலனை செய்து இறுதித்தீர்மானம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இம்முடிவை மேன்முறையீட்டு சபை ஏகமனதாக தீர்மானித்திருந்ததுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பாக கலந்து கொண்ட சோ.காண்டீபராசா அவர்களும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இடமாற்ற சபை அமர்வுகளை தொடர முடிந்தது.அதன் பின்னர் 2025/2026 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற சபை கூட்டப்பட்டு இடமாற்றம் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு 08.09.2025, 11.09.2025, 16.09.205, 17.09.2025, 19.09.2025, 23.09.2025 ஆகிய தினங்களில் இடமாற்ற விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.இதற்கிடையில் 17.09.2025 அன்று இடம்பெற்ற விசேட மேன்முறையீட்டு சபைக்கூட்டத்தில் குறித்த ஆசிரியர் திருமதி.என்.என்.ராஜசேகரன் அவர்களுடைய மேன்முறையீடு தொடர்பாக ஆராய்ந்தபோது கண்வில்லை பொருத்துவது தொடர்பாக தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்பவியலாளரால் வழங்கப்பட்ட கடிதமே சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் கண்மருத்துவரின் உறுதிப்படுத்தல் காணப்படாமையால் இறுதித்தீர்மானம் எட்டப்படவில்லை. இக்கூட்டத்திலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சோ.காண்டீபராசா அவர்கள் கலந்துகொண்டிருந்தார். மீண்டும் 23.09.2025 அன்று இடம்பெற்ற இடமாற்ற சபை அமர்விலும் சோ.காண்டீபராசா கலந்துகொண்டிருந்தார்.பின்னர் மாகாணக்கல்விப் பணிப்பாளரான எனது பணிப்புரைக்கு அமைய மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் குறித்த ஆசிரியர் திருமதி.என்.என்.ராஜசேகரன் அவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதன் அடிப்படையில் கண்மருத்துவரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை சமர்ப்பிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டு அக்கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.இந்தக் கடிதத்தை மேன்முறையீட்டுச் சபைக் கூட்டத்துக்கு சமர்ப்பிக்க வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதி சோ.காண்டீபராசா, மாகாணக் கல்விப் பணிப்பாளரான என்னிடமும், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளரிடமும் கோரியிருந்தார். மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக அது சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நாம் தெரிவித்திருந்தோம்.24.09.2025 அன்று இடம்பெற்ற மேன்முறையீட்டு சபைக்கூட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கப்பிரதிநிதி சோ.காண்டீபராசா அவர்கள் குறித்த ஆசிரியரது இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரியபோது அவ்வாசிரியருக்கு அல்லாது அவரது கணவருக்கே குறித்த பிரச்சினை காணப்படுவதாலும் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தின் மூலம் ஏற்கனவே வெளிமாவட்டத்துக்கு மாற்றம் பெற்றுச்சென்ற இதை ஒத்த பிரச்சினை உள்ள ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்காத வகையிலும் அவருக்கு இலகுவாக போக்குவரத்து செய்யக்கூடிய கிளிநொச்சி வடக்கு வலயப் பாடசாலைக்கு இடமாற்றத்தை வழங்கலாம் என மேன்முறையீட்டு சபைத் தலைவர் என்ற வகையில் என்னால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இக்கருத்துக்கு இலங்கை ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்திருந்தபோதும் இலங்கை ஆசிரியர் சங்கப்பிரதிநிதி சோ.காண்டீபராசா அவர்கள் அதை ஏற்க மறுத்து குறித்த ஆசிரியரது இடமாற்றத்தை இரத்துச் செய்யாத காரணத்தால் தமது ஆசிரியர் சங்கம் இடமாற்ற சபை செயற்பாடுகளில் இருந்து விலகுவதாக கருத்தை பதிவு செய்து கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இவ்விடம் தொடர்பாக ஏனைய மூன்று ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளும் தமது கருத்தை பதிவு செய்திருந்தனர். பின்னர் குறித்த மூன்று ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் ஆசிரியர் திருமதி.என்.என்.ராஜசேகரன் அவர்களுக்கு வவுனியா வடக்கு வலயத்துக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றத்தை கிளிநொச்சி வடக்கு வலயத்துக்கு வேறுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இடமாற்றச் செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொண்டபோதும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், இலங்கை ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆகிய ஏனைய மூன்று சங்கப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் 2025/2026ஆம் ஆண்டுக்கான ஆசிரிய இடமாற்ற சபை செயற்பாடுகளை தொடர்ந்து நடாத்துவது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.அதன் பின்னர் 26.09.2025, 29.09.2025, 01.10.2025, 02.10.2025 ஆகிய தினங்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பங்குபற்றுதல் இன்றி இடமாற்ற விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வலயக் கல்வி அலுவலகங்களால் சமர்ப்பிக்கப்பட்ட பதிலீட்டு பட்டியலின் பிரகாரம் பதிலீடுகள் வழங்கப்பட்டும் இடமாற்றப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. 07.10.2025ஆம் திகதி இடமாற்றசபை உறுப்பினர்களின் ஒப்பம் பெறப்பட்டு எனது அனுமதியுடன் இடமாற்றப்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.2025/2026 இற்கான இடமாற்ற சபை செயற்பாடுகளில் இலங்கை ஆசிரியர் சங்கம் 7 நாட்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்ததுடன் முதல் நாள் அமர்வில் ஏ.தீபன்திலீசன் அவர்களும் 4 நாட்கள் சோ.காண்டீபராசா அவர்களும் 2 நாட்கள் எஸ்.மதியழகன் அவர்களும் குறித்த சங்கம் சார்பாக கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது - என மாகாணக் கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.