• Jan 16 2025

எம்மவர்களிடையே குறைந்துவரும் தலைமைத்துவப் பண்பு; வடக்கு ஆளுநர் வேண்டுகோள்..!

Sharmi / Jan 13th 2025, 10:38 am
image

மாணவர்கள் உங்களை முன்மாதிரியாக கருதிச் செயற்படும் வகையில் நீங்கள் ஆசிரியப் பணியாற்றுங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(11)இடம்பெற்றது. 

ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகக கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில், 

தலைமைத்துவம் முக்கியமானது. பாடசாலை ஒன்றின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதிபர் ஒருவரிலேயே தங்கியிருக்கின்றது. 

இதைப் பல பாடசாலைகளில் நாங்கள் காண்கின்றோம். இன்று எம்மவர்களிடையே தலைமைத்துவப் பண்பு குன்றிச் செல்கின்றது. அதை எதிர்காலத்தில் வளர்த்துக்கொள்ளவேண்டும். 

நாங்கள் இன்றும் எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை மதிக்கின்றோம். அவர்களையே எங்களின் முன்மாதிரிகளாகக் கொள்கின்றோம். 

நீங்களும் அவ்வாறு மற்றவர்கள் மதிக்கின்ற ஆசிரியர்களாக மாறவேண்டும். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வார்கள். அதைப்போல உங்கள் ஆசிரிய சேவையைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் சேவைக்கு உரிய பலன் கிடைக்கும். 

எந்தத் துறையிலும் பயிற்சி இருந்தால்தான் சிறப்பான சேவையைச் செய்யமுடியும். அதனால்தான் காலத்துக்கு காலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

நீங்கள் இங்கு பெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் சிறப்பான சேவையை வழங்குங்கள். நீங்கள் ஆசிரிய சேவைக்காக, முன்னர் பணியாற்றிய இடங்களுக்குச் செல்லப்போகின்றீர்கள். அங்குள்ள மாணவர்களை கல்வியில் முன்னேற்ற அர்ப்பணியுங்கள். கல்வியால்தான் எந்தப் பிரதேசமும் அபிவிருத்தியடையும். 

எனவே, நீங்கள் செய்யும் சேவை ஒரு பிரதேசத்தையே முன்னேற்றும். அதை நினைவிலிருத்தி சேவையாற்றுங்கள் எனவும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்வில் 174 ஆசிரிய மாணவர்கள் தகைமை சான்றிதழை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


எம்மவர்களிடையே குறைந்துவரும் தலைமைத்துவப் பண்பு; வடக்கு ஆளுநர் வேண்டுகோள். மாணவர்கள் உங்களை முன்மாதிரியாக கருதிச் செயற்படும் வகையில் நீங்கள் ஆசிரியப் பணியாற்றுங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(11)இடம்பெற்றது. ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகக கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில், தலைமைத்துவம் முக்கியமானது. பாடசாலை ஒன்றின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதிபர் ஒருவரிலேயே தங்கியிருக்கின்றது. இதைப் பல பாடசாலைகளில் நாங்கள் காண்கின்றோம். இன்று எம்மவர்களிடையே தலைமைத்துவப் பண்பு குன்றிச் செல்கின்றது. அதை எதிர்காலத்தில் வளர்த்துக்கொள்ளவேண்டும். நாங்கள் இன்றும் எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை மதிக்கின்றோம். அவர்களையே எங்களின் முன்மாதிரிகளாகக் கொள்கின்றோம். நீங்களும் அவ்வாறு மற்றவர்கள் மதிக்கின்ற ஆசிரியர்களாக மாறவேண்டும். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வார்கள். அதைப்போல உங்கள் ஆசிரிய சேவையைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் சேவைக்கு உரிய பலன் கிடைக்கும். எந்தத் துறையிலும் பயிற்சி இருந்தால்தான் சிறப்பான சேவையைச் செய்யமுடியும். அதனால்தான் காலத்துக்கு காலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் இங்கு பெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் சிறப்பான சேவையை வழங்குங்கள். நீங்கள் ஆசிரிய சேவைக்காக, முன்னர் பணியாற்றிய இடங்களுக்குச் செல்லப்போகின்றீர்கள். அங்குள்ள மாணவர்களை கல்வியில் முன்னேற்ற அர்ப்பணியுங்கள். கல்வியால்தான் எந்தப் பிரதேசமும் அபிவிருத்தியடையும். எனவே, நீங்கள் செய்யும் சேவை ஒரு பிரதேசத்தையே முன்னேற்றும். அதை நினைவிலிருத்தி சேவையாற்றுங்கள் எனவும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.இந்த நிகழ்வில் 174 ஆசிரிய மாணவர்கள் தகைமை சான்றிதழை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement