• Sep 21 2024

வவுனியாவில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண வெசாக் பண்டிகை! samugammedia

Tamil nila / Apr 21st 2023, 6:52 pm
image

Advertisement

வடமாகாண வெசாக் பண்டிகை வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

சித்தார்த்த கௌதமர் லும்பினி என்னுமிடத்தில் பிறந்த நாள், புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள் மற்றும் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள் என்பவற்றை முன்னுறுத்தி வருடாந்தம் வெசாக் பண்டிகை பௌத்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், எதிர்வரும் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் இவ் வருடத்திற்கான வெசாக் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

அதன்படி வடமாகாணத்திற்கான வெசாக் பண்டிகை குறித்த திகதிகளில் வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள போதி தக்ஷினாராமய விகாரையில் இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுனர் உள்ளிட்ட மாகாணத்தின் உயர்மட்ட அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வவுனியாவில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண வெசாக் பண்டிகை samugammedia வடமாகாண வெசாக் பண்டிகை வவுனியாவில் இடம்பெறவுள்ளது.சித்தார்த்த கௌதமர் லும்பினி என்னுமிடத்தில் பிறந்த நாள், புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள் மற்றும் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள் என்பவற்றை முன்னுறுத்தி வருடாந்தம் வெசாக் பண்டிகை பௌத்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.இதனடிப்படையில், எதிர்வரும் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் இவ் வருடத்திற்கான வெசாக் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.அதன்படி வடமாகாணத்திற்கான வெசாக் பண்டிகை குறித்த திகதிகளில் வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள போதி தக்ஷினாராமய விகாரையில் இடம்பெறவுள்ளது.வடக்கு மாகாண ஆளுனர் உள்ளிட்ட மாகாணத்தின் உயர்மட்ட அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement