• Sep 21 2024

வடக்கின் தொடருந்து பாதை அபிவிருத்தி - 5 மாதங்களில் நிறைவடையும்! - பந்துல

Chithra / Jan 31st 2023, 10:34 am
image

Advertisement

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான தொடரூந்து பாதையின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 05 மாதங்களில் பூர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அபிவிருத்தி பணிகளை பார்வையிடுவதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பின்னர் இவ்வாறு அறிவித்திருந்தார்.

அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரதப் பகுதியின் அபிவிருத்திப் பணிகள் கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டம் இது என்றும் பந்துல சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ், 123 கி.மீ., மேம்பாட்டுத் திட்டம், இந்தியாவின் இர்கான் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இதற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் 91.27 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கின் தொடருந்து பாதை அபிவிருத்தி - 5 மாதங்களில் நிறைவடையும் - பந்துல அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான தொடரூந்து பாதையின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 05 மாதங்களில் பூர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அபிவிருத்தி பணிகளை பார்வையிடுவதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பின்னர் இவ்வாறு அறிவித்திருந்தார்.அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரதப் பகுதியின் அபிவிருத்திப் பணிகள் கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.இலங்கையில் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டம் இது என்றும் பந்துல சுட்டிக்காட்டியிருந்தார்.இந்த திட்டத்தின் கீழ், 123 கி.மீ., மேம்பாட்டுத் திட்டம், இந்தியாவின் இர்கான் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.மேலும், இதற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் 91.27 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement