எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (05) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தபால் மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் https://www.elections.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல்வேறு தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி தபால் மூல வாக்குகளை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவடைவதோடு, எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (05) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தபால் மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் https://www.elections.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.எவ்வாறாயினும், தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல்வேறு தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.இதன்படி தபால் மூல வாக்குகளை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவடைவதோடு, எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.