• May 17 2024

இரண்டு தலைவலி மாத்திரைகளால் வேலையை இழந்த நர்ஸ்: பிரிட்டனில் சம்பவம்!

Tamil nila / Dec 22nd 2022, 11:10 pm
image

Advertisement

பிரிட்டனில் NHS நர்ஸ் ஒருவர் தாம் பணியாற்றும் மருத்துவமனையில் இருந்து தமக்காக இரண்டு தலைவலி மாத்திரைகள் எடுத்துக்கொண்ட சம்பவத்தில் தற்போது வேலையை இழந்துள்ளார்.


பிரிட்டனில் லிவர்பூல் பகுதில் அமைந்துள்ள Arrowe Park மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார் 32 வயதான பிரான்செஸ்கா மோர்கன். இவர் சம்பவத்தன்று உரிய காரணம் ஏதும் பதிவு செய்யாமல் இரண்டு தலைவலி மாத்திரைகளை மருந்தகத்தில் இருந்து பயன்படுத்தியுள்ளார்.


மருத்துவரின் குறிப்பு ஏதும் இல்லாமல், மாத்திரை மாயமாகியுள்ளது கண்டறியப்பட்டதை தொடர்ந்து கண்காணிப்பு கமெரா ஒன்றை பொருத்தியுள்ளனர். குறித்த கமெராவில் மோர்கன் சிக்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.



ஜூன் 6 மற்றும் 18ம் திகதிகளில், மோர்கன் மாத்திரைகளை எடுத்து பயன்படுத்தியுள்ளார். முதல் நாள் co-codamol மாத்திரையும் இரண்டாவது நாள் பாராசிட்டமால் மாத்திரையும் மோர்கன் பயன்படுத்தியுள்ளார்.


தலைவலியால் துடித்த மோர்கன், எஞ்சிய நர்ஸ்கள் போன்று மாத்திரைகளை பயன்படுத்துவது தவறில்லை எனவும் கருதியுள்ளார். இந்த நிலையில், மோர்கன் மீது மருத்துவமனை நிர்வாகம் வழக்குத் தொடுத்ததுடன்,



அவரது வேலையும் பறிபோயுள்ளது. அத்துடன் தங்கும் இடத்தையும் அவர் இழந்துள்ளார். இதனால் தற்போது தமது பாட்டியுடன் அவர் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இரண்டு தலைவலி மாத்திரைகளால் வேலையை இழந்த நர்ஸ்: பிரிட்டனில் சம்பவம் பிரிட்டனில் NHS நர்ஸ் ஒருவர் தாம் பணியாற்றும் மருத்துவமனையில் இருந்து தமக்காக இரண்டு தலைவலி மாத்திரைகள் எடுத்துக்கொண்ட சம்பவத்தில் தற்போது வேலையை இழந்துள்ளார்.பிரிட்டனில் லிவர்பூல் பகுதில் அமைந்துள்ள Arrowe Park மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார் 32 வயதான பிரான்செஸ்கா மோர்கன். இவர் சம்பவத்தன்று உரிய காரணம் ஏதும் பதிவு செய்யாமல் இரண்டு தலைவலி மாத்திரைகளை மருந்தகத்தில் இருந்து பயன்படுத்தியுள்ளார்.மருத்துவரின் குறிப்பு ஏதும் இல்லாமல், மாத்திரை மாயமாகியுள்ளது கண்டறியப்பட்டதை தொடர்ந்து கண்காணிப்பு கமெரா ஒன்றை பொருத்தியுள்ளனர். குறித்த கமெராவில் மோர்கன் சிக்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.ஜூன் 6 மற்றும் 18ம் திகதிகளில், மோர்கன் மாத்திரைகளை எடுத்து பயன்படுத்தியுள்ளார். முதல் நாள் co-codamol மாத்திரையும் இரண்டாவது நாள் பாராசிட்டமால் மாத்திரையும் மோர்கன் பயன்படுத்தியுள்ளார்.தலைவலியால் துடித்த மோர்கன், எஞ்சிய நர்ஸ்கள் போன்று மாத்திரைகளை பயன்படுத்துவது தவறில்லை எனவும் கருதியுள்ளார். இந்த நிலையில், மோர்கன் மீது மருத்துவமனை நிர்வாகம் வழக்குத் தொடுத்ததுடன்,அவரது வேலையும் பறிபோயுள்ளது. அத்துடன் தங்கும் இடத்தையும் அவர் இழந்துள்ளார். இதனால் தற்போது தமது பாட்டியுடன் அவர் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement