• Sep 17 2024

ஆசிரியரின் சம்பள வரி கழித்தமை தவறு ; மீள வழங்குவதை உறுதி செய்யவும் - இறைவரித் திணைக்களம் கடிதம்!

Tamil nila / Dec 22nd 2022, 10:55 pm
image

Advertisement

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உற்பட்ட பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு அவர் பெறும் சம்பளத்திற்கான  உழைக்கும் போது செலுத்தும் வரி அறவிட்டமை தவறு என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வடமாகாண கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த, சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  ஆசிரியர் ஒருவருக்கு ஜூன் மாத சம்பளத்தில் உழைக்கும் போது வரி அறவீட்டு முறையின் கீழ் 18,401 ரூபா கழிக்கப்பட்டது.


2018, 2019 வரி மதிப்பீட்டுக்கான உள்நாட்டு வருமானவரிச் சட்ட ஏற்பாடுகளின் படி உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரி அளவீட்டு முறைக்கு மாறாக வரி அளவிடப்பட்ட மை தொடர்பில் ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஏற்பாடுகளின் படி  உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரி அறவீட்டு சுற்று நிருபங்களை முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகம் உரிய முறையில் பின்பற்றவில்லை என தெரிவித்து குறித்த ஆசிரியரால் இறைவரித் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டது .

குறித்த கடிதத்தில், குறித்த முறைப்பாட்டாளரான  ஆசிரியரின் சம்பள வரியை அறவிட்ட முறை தவறு என சுட்டிக்காட்டியதுடன் கழிக்கப்பட்ட சம்பள வரியை மீள வழங்குமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் சம்பள வரி கழித்தமை தவறு ; மீள வழங்குவதை உறுதி செய்யவும் - இறைவரித் திணைக்களம் கடிதம் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உற்பட்ட பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு அவர் பெறும் சம்பளத்திற்கான  உழைக்கும் போது செலுத்தும் வரி அறவிட்டமை தவறு என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வடமாகாண கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த, சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  ஆசிரியர் ஒருவருக்கு ஜூன் மாத சம்பளத்தில் உழைக்கும் போது வரி அறவீட்டு முறையின் கீழ் 18,401 ரூபா கழிக்கப்பட்டது.2018, 2019 வரி மதிப்பீட்டுக்கான உள்நாட்டு வருமானவரிச் சட்ட ஏற்பாடுகளின் படி உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரி அளவீட்டு முறைக்கு மாறாக வரி அளவிடப்பட்ட மை தொடர்பில் ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டது.இந்நிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஏற்பாடுகளின் படி  உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரி அறவீட்டு சுற்று நிருபங்களை முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகம் உரிய முறையில் பின்பற்றவில்லை என தெரிவித்து குறித்த ஆசிரியரால் இறைவரித் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டது .குறித்த கடிதத்தில், குறித்த முறைப்பாட்டாளரான  ஆசிரியரின் சம்பள வரியை அறவிட்ட முறை தவறு என சுட்டிக்காட்டியதுடன் கழிக்கப்பட்ட சம்பள வரியை மீள வழங்குமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement