தாதியர் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலை ஆண் பெண் தாதியர்களுக்கிடையிலான போட்டிகள் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் விடுதி தாதிய சகோதரி R.கிருபாகரன் தலமையில் குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து தவில் நாதஸ்வர இசை முழங்க மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து வரவேற்பு உரை, வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றன. அதனை தொடர்ந்து சிலம்பாட்டம் காட்சி இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின்,
தெல்லிப்பளை, பருத்தித்துறை ஆதார வைதியசாலைகளின் மகளிர் தாதியர்களுக்கான வலைப்பந்தாட்டமும், ஆண் தாதிய உத்தியோகத்தர்க்களுக்கான மென் பந்து துடுப்பாட்டமும் இடம் பெற்றது.
இதில் மகளிர் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கும் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலை ஆண் தாதியர்களுக்கு இடம் பெற்றது. இம் மென்பந்து துடுப்பாட்டி சம நிலையில் முடிவுற்றது.
இப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் பதக்கங்கள், பரிசில்களை நிகழ்வின் பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழங்கிகௌரவித்தனர்.
தாதியர் தினத்தை முன்னிட்டு தாதியர்களுக்கிடையிலான போட்டிகள். தாதியர் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலை ஆண் பெண் தாதியர்களுக்கிடையிலான போட்டிகள் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் விடுதி தாதிய சகோதரி R.கிருபாகரன் தலமையில் குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம் பெற்றது.இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து தவில் நாதஸ்வர இசை முழங்க மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றலுடன் ஆரம்பமானது.தொடர்ந்து வரவேற்பு உரை, வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றன. அதனை தொடர்ந்து சிலம்பாட்டம் காட்சி இடம் பெற்றது.அதனை தொடர்ந்து வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின், தெல்லிப்பளை, பருத்தித்துறை ஆதார வைதியசாலைகளின் மகளிர் தாதியர்களுக்கான வலைப்பந்தாட்டமும், ஆண் தாதிய உத்தியோகத்தர்க்களுக்கான மென் பந்து துடுப்பாட்டமும் இடம் பெற்றது.இதில் மகளிர் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கும் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலை ஆண் தாதியர்களுக்கு இடம் பெற்றது. இம் மென்பந்து துடுப்பாட்டி சம நிலையில் முடிவுற்றது.இப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் பதக்கங்கள், பரிசில்களை நிகழ்வின் பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழங்கிகௌரவித்தனர்.