• May 19 2024

பல உயிர்களை காவு கொண்ட ஒடிசா கோர விபத்து...ரயில்வே அதிகாரிகள் மூவர் கைது...!samugammedia

Tamil nila / Jul 8th 2023, 6:53 pm
image

Advertisement

ஒடிசாவில் ரயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்து தொடர்பாக ரயில்வே துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளை  கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக,  விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணைய அறிக்கையில், சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட மனித பிழை இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துக்கு வழிசமைத்தாக  கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இவ்வாறான சூழலில், பெரும் தவறுக்கு காரணமானவர்கள் என்று குறிப்பிட்டு, மூத்த செக்சன் என்ஜினீயர் அருண் குமார் மொகந்தா, செக்சன் என்ஜினீயர் முகமது அமீர்கான் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பப்பு குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதையடுத்து, அவர்கள் மீது கொலைக்குச் சமமான குற்றமற்ற கொலைக்கான தண்டனை, குற்றத்திற்கான ஆதாரங்களை காணாமல் செய்வது மற்றும் குற்றவாளிக்கு தவறான தகவல்களைத் தருவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல உயிர்களை காவு கொண்ட ஒடிசா கோர விபத்து.ரயில்வே அதிகாரிகள் மூவர் கைது.samugammedia ஒடிசாவில் ரயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்து தொடர்பாக ரயில்வே துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளை  கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக,  விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணைய அறிக்கையில், சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட மனித பிழை இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துக்கு வழிசமைத்தாக  கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான சூழலில், பெரும் தவறுக்கு காரணமானவர்கள் என்று குறிப்பிட்டு, மூத்த செக்சன் என்ஜினீயர் அருண் குமார் மொகந்தா, செக்சன் என்ஜினீயர் முகமது அமீர்கான் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பப்பு குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.அதையடுத்து, அவர்கள் மீது கொலைக்குச் சமமான குற்றமற்ற கொலைக்கான தண்டனை, குற்றத்திற்கான ஆதாரங்களை காணாமல் செய்வது மற்றும் குற்றவாளிக்கு தவறான தகவல்களைத் தருவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement