இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் வடக்கு கோபுரம் அருகே உள்ள நந்தவனத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் கோவில் யானை ராமலெட்சுமி குதூகலமாக ஆட்டம் போட்ட காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருக்கோவிலில் உள்ள யானைகள் உற்சாகமாக குளித்து மகிழும் வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் நீச்சல் குளம் போன்ற வகையில் ஆலயத்தின் வடக்கு வாசலில் உள்ள நந்தவனத்தில் கட்டமைப்புகள் கட்டப்பட்டு யானைகள் நீராடுவதற்கான வசதிகள் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நவீன வசதிகளுடன் யானை குளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோடை வெயில் தாக்கத்தால் தவித்த யானையை இந்த நீச்சல் குளத்தில் இறக்கி விட்டு நீராட விட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஆனந்தமாக ஆட்டம் போட்டு குளித்தும் கோடை வெயிலை எதிர்கொண்டு ராமலட்சுமி யானை ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தது.
யானை பாகனும் குறித்த யானையை நீச்சல் குளத்தில் இருந்து வெளியே அழைத்தபோது வெகுநேரமாக வெளியே வர மனமில்லாமல் ராமலட்சுமி தண்ணீரில் விளையாடி கொண்டே இருந்தது.
பின்னர் யானை பாகன் வெளியே அழைத்து நிறுத்தி குளித்தது போதுமா என கேட்டதற்கு தலையை க்யூட்டாக ஆட்டி கொண்டு பிளிறியது.
இந்தகாட்சியானது அங்கிருந்தவர்களை திகைப்படைய செய்ததுடன் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடடா என்ன வெயிலு.கோவில் நீச்சல் குளத்தில் குஷியாக ஆட்டம் போட்ட யானை. இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் வடக்கு கோபுரம் அருகே உள்ள நந்தவனத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் கோவில் யானை ராமலெட்சுமி குதூகலமாக ஆட்டம் போட்ட காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திருக்கோவிலில் உள்ள யானைகள் உற்சாகமாக குளித்து மகிழும் வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் நீச்சல் குளம் போன்ற வகையில் ஆலயத்தின் வடக்கு வாசலில் உள்ள நந்தவனத்தில் கட்டமைப்புகள் கட்டப்பட்டு யானைகள் நீராடுவதற்கான வசதிகள் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.இதில் நவீன வசதிகளுடன் யானை குளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், கோடை வெயில் தாக்கத்தால் தவித்த யானையை இந்த நீச்சல் குளத்தில் இறக்கி விட்டு நீராட விட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஆனந்தமாக ஆட்டம் போட்டு குளித்தும் கோடை வெயிலை எதிர்கொண்டு ராமலட்சுமி யானை ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தது.யானை பாகனும் குறித்த யானையை நீச்சல் குளத்தில் இருந்து வெளியே அழைத்தபோது வெகுநேரமாக வெளியே வர மனமில்லாமல் ராமலட்சுமி தண்ணீரில் விளையாடி கொண்டே இருந்தது.பின்னர் யானை பாகன் வெளியே அழைத்து நிறுத்தி குளித்தது போதுமா என கேட்டதற்கு தலையை க்யூட்டாக ஆட்டி கொண்டு பிளிறியது.இந்தகாட்சியானது அங்கிருந்தவர்களை திகைப்படைய செய்ததுடன் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.