கண்டி - கீழ் கடுகண்ணா பகுதியில் நடந்த மண்மேடு சரிவு காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி நகர முடியாமல் நின்றுள்ளன.
இதனால், மக்கள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.
கடுகன்னாவையிலிருந்து அம்புலாவ பிரதான சாலை வழியாக கம்பளை செல்லும் பிரதான சாலையே இவ்வாறு அதிக வாகன நெரிசல் காரணமாக ஸ்தம்பித்து போயுள்ளது.
இதேவேளை, விபத்தின் சூழ்நிலை காரணமாக, கொழும்பு கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ முதல் மாவனெல்ல வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடுகண்ணா பாதையில் வரிசைகட்டி நின்ற வாகனங்கள் பயணிகள் அவதி கண்டி - கீழ் கடுகண்ணா பகுதியில் நடந்த மண்மேடு சரிவு காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த பாதையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி நகர முடியாமல் நின்றுள்ளன.இதனால், மக்கள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.கடுகன்னாவையிலிருந்து அம்புலாவ பிரதான சாலை வழியாக கம்பளை செல்லும் பிரதான சாலையே இவ்வாறு அதிக வாகன நெரிசல் காரணமாக ஸ்தம்பித்து போயுள்ளது.இதேவேளை, விபத்தின் சூழ்நிலை காரணமாக, கொழும்பு கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ முதல் மாவனெல்ல வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.