• Sep 29 2024

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு காரியாலயம் முன் கவனயீர்ப்பு போராட்டம்! samugammedia

Tamil nila / Dec 10th 2023, 9:00 pm
image

Advertisement

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10)திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.

இந்த போராட்டத்தை வடகிழக்கு ஒருங்கிணைப்பு  குழு வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.



நீதியான சர்வதேச பொறிமுறை விசாரணை தேவை, உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம், எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடக்கின்றது நீதி இல்லை இதனால் எதற்கு இந்த மனித உரிமைகள் தினம் என இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.



அத்துடன் தனது மகனை விடுவிக்க கடற்படை அதிகாரி 15 இலட்சம் ரூபா கப்பம் கேட்டனர் இது தொடர்பான பற்றுசீட்டினை என்னை வரவழைத்து அதனை பெற்று கிழித்துவிட்டனர் எனவும் தாய் ஒருவர் இதன் போது கண்ணீர் மல்க தெரிவித்தார்.பல பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு காரியாலயம் முன் கவனயீர்ப்பு போராட்டம் samugammedia சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10)திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.இந்த போராட்டத்தை வடகிழக்கு ஒருங்கிணைப்பு  குழு வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.நீதியான சர்வதேச பொறிமுறை விசாரணை தேவை, உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம், எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடக்கின்றது நீதி இல்லை இதனால் எதற்கு இந்த மனித உரிமைகள் தினம் என இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.அத்துடன் தனது மகனை விடுவிக்க கடற்படை அதிகாரி 15 இலட்சம் ரூபா கப்பம் கேட்டனர் இது தொடர்பான பற்றுசீட்டினை என்னை வரவழைத்து அதனை பெற்று கிழித்துவிட்டனர் எனவும் தாய் ஒருவர் இதன் போது கண்ணீர் மல்க தெரிவித்தார்.பல பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement