• Feb 25 2025

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு ஒருவர் கைது!

Tharmini / Feb 24th 2025, 9:52 am
image

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் கொலை செய்யப்பட்டமைக்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றம் தொடர்பில் கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்படி, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (23) பிற்பகல் முகத்துவாரம், மெட்சந்த செவன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதான முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அவர் வெளிநாடு ஒன்றில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, இந்நாட்டில் குற்றச் செயல்களை மேற்கொண்டுவரும் நபர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கொஸ்கசந்தியா பகுதியில் உள்ள அவரது மனைவி வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற சந்தேகநபர், குறித்த துப்பாக்கி, ரவைகளை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்கு துப்பாக்கியை வழங்கியவர் இந்த சந்தேகநபரும் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு ஒருவர் கைது கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் கொலை செய்யப்பட்டமைக்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 21 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றம் தொடர்பில் கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.இதன்படி, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (23) பிற்பகல் முகத்துவாரம், மெட்சந்த செவன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதான முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவராவார்.சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அவர் வெளிநாடு ஒன்றில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, இந்நாட்டில் குற்றச் செயல்களை மேற்கொண்டுவரும் நபர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கொஸ்கசந்தியா பகுதியில் உள்ள அவரது மனைவி வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற சந்தேகநபர், குறித்த துப்பாக்கி, ரவைகளை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.கடந்த 10 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்கு துப்பாக்கியை வழங்கியவர் இந்த சந்தேகநபரும் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement