• Apr 03 2025

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

Thansita / Apr 1st 2025, 9:37 pm
image

புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது 

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி நிறுவன கடற்படையினருடன் இணைந்து புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்த 3000 வெளிநாட்டு சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்றையதினம்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி நிறுவன கடற்படையினருடன் இணைந்து புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்த 3000 வெளிநாட்டு சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement