• Sep 20 2024

வேட்பாளர் ஒருவர் மற்றொரு வேட்பாளரை ஊக்குவித்து பிரசாரம் செய்ய தடை! அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Chithra / Sep 15th 2024, 9:32 am
image

Advertisement

 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மற்றொரு வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் செய்வது தேர்தல் சட்டத்துக்கு முரணானதெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு சமர்ப்பித்துள்ள சில வேட்பாளர்கள் பிற வேட்பாளர்களுக்காக அல்லது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் முற்றிலும் தேர்தல் சட்டத்துக்கு முரணானது என்பதால் அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.

எனவே, இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் அருகிலுள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் திணைக்களம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும், வாக்காளர் அட்டையின்றி, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய செல்லுபடியாகும் ஆவணங்களைச் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டமீறல் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4031 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


வேட்பாளர் ஒருவர் மற்றொரு வேட்பாளரை ஊக்குவித்து பிரசாரம் செய்ய தடை அதிகரிக்கும் முறைப்பாடுகள்  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மற்றொரு வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் செய்வது தேர்தல் சட்டத்துக்கு முரணானதெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு சமர்ப்பித்துள்ள சில வேட்பாளர்கள் பிற வேட்பாளர்களுக்காக அல்லது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இவ்வாறான செயற்பாடுகள் முற்றிலும் தேர்தல் சட்டத்துக்கு முரணானது என்பதால் அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.எனவே, இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் அருகிலுள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் திணைக்களம் கோரியுள்ளது.எவ்வாறாயினும், வாக்காளர் அட்டையின்றி, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய செல்லுபடியாகும் ஆவணங்களைச் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டமீறல் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4031 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement