கல்கிஸ்சை – வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (07) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
36 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
மற்றவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில்,
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
update - இலங்கையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு - இருவர் பலி கல்கிஸ்சை – வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று (07) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.36 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.