• May 20 2024

அதிக வெப்பம் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் மரணம்! samugammedia

Chithra / Apr 27th 2023, 1:35 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அனுராதபுரத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

எப்பாவல, மெடியாவ, யாய 2 பகுதியில் அதிக வெப்பநிலையை தாங்க முடியாமல் 81 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். வெப்ப அதிர்ச்சியினால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் மூன்று இறப்புகள் வெவ்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, தற்போதைய வெப்பநிலைக்கு முகங்கொடுக்கும் வகையில் வெப்ப ஆற்றலைக் குறைக்கும் வகையில் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கடுமையான பணிகளில் ஈடுபடுவது உடலுக்கு உகந்தது அல்ல எனவும் மே மாதம் 20ஆம் திகதிக்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் தென்மேற்குப் பருவமழைக்குப் பிறகு இந்நிலை முற்றிலும் மாறிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் மரணம் samugammedia நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அனுராதபுரத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.எப்பாவல, மெடியாவ, யாய 2 பகுதியில் அதிக வெப்பநிலையை தாங்க முடியாமல் 81 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். வெப்ப அதிர்ச்சியினால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக வெப்பநிலை காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் மூன்று இறப்புகள் வெவ்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, தற்போதைய வெப்பநிலைக்கு முகங்கொடுக்கும் வகையில் வெப்ப ஆற்றலைக் குறைக்கும் வகையில் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.கடுமையான பணிகளில் ஈடுபடுவது உடலுக்கு உகந்தது அல்ல எனவும் மே மாதம் 20ஆம் திகதிக்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் தென்மேற்குப் பருவமழைக்குப் பிறகு இந்நிலை முற்றிலும் மாறிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement