• May 05 2025

கலா ஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் பலி; இளம் யுவதி மாயம்

Chithra / May 4th 2025, 12:52 pm
image

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலா ஓயா ஆற்றில் நீராடச்  சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை  இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்  42 வயதுடையவர் என்றும், காணாமல் போன பெண் 22 வயதுடையவர் என்றும், 

இருவரும் கற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரும் காணாமல் போன பெண்ணும் மற்றொரு குழுவினருடன் கலா ஓயாவில் நீராடிய போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், காணாமல் போன பெண்ணைத் தேடுவதற்காக கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 

வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கலா ஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் பலி; இளம் யுவதி மாயம் வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலா ஓயா ஆற்றில் நீராடச்  சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை  இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்  42 வயதுடையவர் என்றும், காணாமல் போன பெண் 22 வயதுடையவர் என்றும், இருவரும் கற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.உயிரிழந்த நபரும் காணாமல் போன பெண்ணும் மற்றொரு குழுவினருடன் கலா ஓயாவில் நீராடிய போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும், காணாமல் போன பெண்ணைத் தேடுவதற்காக கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement