• Feb 02 2025

கிணற்றில் விழுந்த ஒரு வயது குழந்தை பரிதாப மரணம்

Chithra / Feb 2nd 2025, 11:32 am
image


மெதகம, மெகல்லகம பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்து குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மல்கஸ்தலாவ, மாகல்லகம பகுதியில் வசிக்கும் 1 வயது 2 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாய் வீட்டில் இருந்த போது, ​​வீட்டின் முன் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்துள்ளதாக விசாரணையில்  தெரியவருகிறது.

சடலம் மெதகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கிணற்றில் விழுந்த ஒரு வயது குழந்தை பரிதாப மரணம் மெதகம, மெகல்லகம பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்து குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.மல்கஸ்தலாவ, மாகல்லகம பகுதியில் வசிக்கும் 1 வயது 2 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.தாய் வீட்டில் இருந்த போது, ​​வீட்டின் முன் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்துள்ளதாக விசாரணையில்  தெரியவருகிறது.சடலம் மெதகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement