சர்வதேச நாடுகளின் மதிப்பு மிக்க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே வீழ்ச்சி பெற்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட தொகுதி அமைப்பாளர் வைத்தியர் எஸ் விஜயராஜன் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய விட்டுச் சென்ற போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பொறுப்பெடுக்க முன் வரவில்லை.
தேசியப்பட்டியல் ஆசனத்துடன் பிரதமராக வந்து பின் ஜனாதிபதியாக நாட்டைப் பொறுப்பெடுத்து ரணில் விக்கிரமசிங்க நாட்டின் நெருக்கடி நிலையில் இருந்து சற்று ஓய்வு கொடுத்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக மக்கள் ஆணை வழங்கவுள்ள நிலையில் நாட்டு மக்கள் காஸ் சின்னத்தில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது வாக்குகளை வழங்க வேண்டும்.
சர்வதேசத்தின் நன் மதிப்பைப் பெற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே சர்வதேச இராஜதாந்திரிகளை இலகுவாகக் கையாள முடியும் .
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் மூன்று முக்கிய வேட்பாளர்களுக்கு இடையில் போட்டி நிலவ உள்ளது.
அவர்களில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுர பழைய ஜேவிபி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையில் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.
நான் பெரதெனியாவில் வைத்திய துறையில் வேலைக்கு இணைந்த காலம் ஜேவிபியின் கொடுமகளை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்.செய்த அட்டூழியங்கள் என்றும் நமது மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள நிலையில் மீண்டும் அவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு தமிழ் சிங்கள மக்கள் விரும்ப மாட்டார்கள்.
ஆகவே நாட்டை ஆளக்கூடிய இன குரோதமற்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் திறமைக்கு மக்கள் தமது வாக்குகளினால் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேசத்தின் மதிப்பு மிக்க தலைவர் ரணில் - மட்டுமே நாட்டை மீட்க முடியும் சர்வதேச நாடுகளின் மதிப்பு மிக்க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே வீழ்ச்சி பெற்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட தொகுதி அமைப்பாளர் வைத்தியர் எஸ் விஜயராஜன் வேண்டுகோள் விடுத்தார்.இன்று திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய விட்டுச் சென்ற போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பொறுப்பெடுக்க முன் வரவில்லை.தேசியப்பட்டியல் ஆசனத்துடன் பிரதமராக வந்து பின் ஜனாதிபதியாக நாட்டைப் பொறுப்பெடுத்து ரணில் விக்கிரமசிங்க நாட்டின் நெருக்கடி நிலையில் இருந்து சற்று ஓய்வு கொடுத்துள்ளார்.எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக மக்கள் ஆணை வழங்கவுள்ள நிலையில் நாட்டு மக்கள் காஸ் சின்னத்தில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது வாக்குகளை வழங்க வேண்டும்.சர்வதேசத்தின் நன் மதிப்பைப் பெற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே சர்வதேச இராஜதாந்திரிகளை இலகுவாகக் கையாள முடியும் .இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் மூன்று முக்கிய வேட்பாளர்களுக்கு இடையில் போட்டி நிலவ உள்ளது.அவர்களில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுர பழைய ஜேவிபி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையில் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.நான் பெரதெனியாவில் வைத்திய துறையில் வேலைக்கு இணைந்த காலம் ஜேவிபியின் கொடுமகளை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்.செய்த அட்டூழியங்கள் என்றும் நமது மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள நிலையில் மீண்டும் அவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு தமிழ் சிங்கள மக்கள் விரும்ப மாட்டார்கள்.ஆகவே நாட்டை ஆளக்கூடிய இன குரோதமற்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் திறமைக்கு மக்கள் தமது வாக்குகளினால் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.