• Dec 26 2024

மட்டக்களப்பில் தேர்தல் விதிமுறை மீறல்கள்மட்டுமே நடைபெற்றுள்ளது - மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஜி. முரளிதரன்

Tharmini / Nov 12th 2024, 12:12 pm
image

பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று (11) நள்ளிரவு முதல் நிறைவுபெற்றுள்ள நிலையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 218தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும்.

இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இம்முறை மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,49,686பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதுடன் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 17003பேரும் தகுதிபெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



மட்டக்களப்பில் தேர்தல் விதிமுறை மீறல்கள்மட்டுமே நடைபெற்றுள்ளது - மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஜி. முரளிதரன் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று (11) நள்ளிரவு முதல் நிறைவுபெற்றுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 218தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும். இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இம்முறை மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,49,686பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதுடன் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 17003பேரும் தகுதிபெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement