பல வருடங்கள் பழமைவாய்ந்த கற்பிட்டி பௌத்த விகாரை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நேற்றையதினம்(24) பெருந்திரளான மக்கள் மத்தியில் தூபிக் கலசம் வைக்கப்பட்டு விகாரை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
அதேவேளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு பெரஹரா நிகழ்வும் நேற்றையதினம் இரவு இடம்பெற்றது.
இதேவேளை, கற்பிட்டி பிரதான வீதியின் ஊடாக யானை ஊர்வலத்துடன் கற்பிட்டி நகரை பெரஹரா நிகழ்வு அலங்கரித்திருந்தது.
இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேசத்தில் வாழும் மூவின மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும் நேற்று (24) மாலை கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க தலைமையில் வெசாக் தின விசேட சவ்வரிசிக் கஞ்சி தானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கற்பிட்டி பௌத்த விகாரை மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு. பல வருடங்கள் பழமைவாய்ந்த கற்பிட்டி பௌத்த விகாரை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நேற்றையதினம்(24) பெருந்திரளான மக்கள் மத்தியில் தூபிக் கலசம் வைக்கப்பட்டு விகாரை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.அதேவேளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு பெரஹரா நிகழ்வும் நேற்றையதினம் இரவு இடம்பெற்றது.இதேவேளை, கற்பிட்டி பிரதான வீதியின் ஊடாக யானை ஊர்வலத்துடன் கற்பிட்டி நகரை பெரஹரா நிகழ்வு அலங்கரித்திருந்தது. இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேசத்தில் வாழும் மூவின மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.மேலும் நேற்று (24) மாலை கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க தலைமையில் வெசாக் தின விசேட சவ்வரிசிக் கஞ்சி தானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.