கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட, மணியரசன் குளத்தை அண்டிய வயல் நிலங்களுக்கு முறையாக நீர்ப்பாசனம் வழங்குவதற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாய்க்கால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
1.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த வாய்க்கால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி இணைப்பாளர் எம்.ஈ.எம். ராபிக் இதனைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சின் இணைப்புச் செயலாளர் அஷ்ரப் இம்ரான், கிண்ணியா பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ். நிஹாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சினை தீர்வு
நீண்ட காலமாக, மணியரசன் குளத்திலிருந்து ஒரு பகுதி விவசாயிகள் மட்டுமே நீரைப் பெற்று விவசாயம் செய்து வந்தனர்.
இதனால், ஒவ்வொரு போகமும் சுமார் 80 ஏக்கர் வயல் நிலங்களுக்கு மட்டுமே நீர் கிடைத்து வந்தது. இதன் காரணமாக, அப்பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தொடர்ச்சியாக விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக, ஒரு வார காலத்துக்குள் புதிய கால்வாய் வெட்டப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாய்க்கால் மூலம் 160 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், அனைத்து விவசாயிகளுக்கும் எல்லாப் போகங்களிலும் தொடர்ச்சியாக விவசாயம் செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளமையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இவ்வாறு வாய்க்கால் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து விவசாயக் கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அத்துடன், வாய்க்காலில் நீர் நிறைந்திருப்பதால் நன்னீர் மீன் வளர்ப்புக்கும் சாதகமான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
160 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி புதிய வாய்க்கால் திறப்பு கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட, மணியரசன் குளத்தை அண்டிய வயல் நிலங்களுக்கு முறையாக நீர்ப்பாசனம் வழங்குவதற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாய்க்கால் இன்று திறந்து வைக்கப்பட்டது.1.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த வாய்க்கால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி இணைப்பாளர் எம்.ஈ.எம். ராபிக் இதனைத் திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சின் இணைப்புச் செயலாளர் அஷ்ரப் இம்ரான், கிண்ணியா பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ். நிஹாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சினை தீர்வுநீண்ட காலமாக, மணியரசன் குளத்திலிருந்து ஒரு பகுதி விவசாயிகள் மட்டுமே நீரைப் பெற்று விவசாயம் செய்து வந்தனர். இதனால், ஒவ்வொரு போகமும் சுமார் 80 ஏக்கர் வயல் நிலங்களுக்கு மட்டுமே நீர் கிடைத்து வந்தது. இதன் காரணமாக, அப்பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தொடர்ச்சியாக விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக, ஒரு வார காலத்துக்குள் புதிய கால்வாய் வெட்டப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாய்க்கால் மூலம் 160 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்து விவசாயிகளுக்கும் எல்லாப் போகங்களிலும் தொடர்ச்சியாக விவசாயம் செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளமையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும், இவ்வாறு வாய்க்கால் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து விவசாயக் கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அத்துடன், வாய்க்காலில் நீர் நிறைந்திருப்பதால் நன்னீர் மீன் வளர்ப்புக்கும் சாதகமான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.