அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனை எமது குறுகிய அரசியலுக்கான நாங்கள் பயன்படுத்திக் கொள்ள போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
தோற்றம் பெறும் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோமென அவர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளின் பின்னணியில்இ ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் அவசர நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த நெருக்கடி தேசிய ரீதியானது. இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கலாமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஏற்றுமதியாளர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி நீக்கத்தில் அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
பொருட்கள் மற்றும் சேவைகளில் தாராளமயமாக்கலுக்கு நாம் உறுதியளிக்காவிட்டால் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் ஒரு கனவாகவே இருக்கும்.
நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க அரசுக்கு ஒத்துழைப்பு - எதிர்க்கட்சிகள் பகிரங்க அறிவிப்பு அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனை எமது குறுகிய அரசியலுக்கான நாங்கள் பயன்படுத்திக் கொள்ள போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். தோற்றம் பெறும் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோமென அவர் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளின் பின்னணியில்இ ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் அவசர நிவாரணம் வழங்க வேண்டும். இந்த நெருக்கடி தேசிய ரீதியானது. இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கலாமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது,ஏற்றுமதியாளர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி நீக்கத்தில் அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.பொருட்கள் மற்றும் சேவைகளில் தாராளமயமாக்கலுக்கு நாம் உறுதியளிக்காவிட்டால் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் ஒரு கனவாகவே இருக்கும். நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்றார்.