• Sep 19 2024

ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு!

Sharmi / Feb 9th 2023, 1:59 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க நாளை மறுதினம்(11) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை யாழிற்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் யாழ் வருகை தொடர்பில் தனது சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ள வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ்,

அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

"ஜனாதிபதி யாழிற்கு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி வருகிறாராம். எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம். அழைப்பிதல் கிடைத்தாலும் இல்லா விட்டாலும் வாழ்நாளில் சுதந்திர தினத்தில் நான் பங்கெடுத்ததில்லை. எனக்கு 37 வயதாகின்றது. வாழ்நாளில் சுதந்திர தினத்தில் மகிழக் கிடைக்கவில்லை. எங்கள் உணர்வுகளை ஆட்சி பீடங்கள் புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. சாதாரண சிங்கள மக்கள் இந்த வலியை புரிந்து கொள்வது அவசியம்." என பதிவிடப்பட்டுள்ளது.









ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க நாளை மறுதினம்(11) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இந்நிலையில் யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை யாழிற்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஜனாதிபதியின் யாழ் வருகை தொடர்பில் தனது சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ள வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ்,அதில் குறிப்பிட்டுள்ளதாவது,"ஜனாதிபதி யாழிற்கு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி வருகிறாராம். எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம். அழைப்பிதல் கிடைத்தாலும் இல்லா விட்டாலும் வாழ்நாளில் சுதந்திர தினத்தில் நான் பங்கெடுத்ததில்லை. எனக்கு 37 வயதாகின்றது. வாழ்நாளில் சுதந்திர தினத்தில் மகிழக் கிடைக்கவில்லை. எங்கள் உணர்வுகளை ஆட்சி பீடங்கள் புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. சாதாரண சிங்கள மக்கள் இந்த வலியை புரிந்து கொள்வது அவசியம்." என பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement