• Sep 21 2024

தேர்தல் விடயத்தில் உடன் தலையிடுக - ஐ.நா.வை கோரியது எதிர்க்கட்சி!

Tamil nila / Feb 17th 2023, 8:44 am
image

Advertisement

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள அரசமைப்புக்கு முரணான முயற்சிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாட்டை முன்வைத்துள்ளது் இந்த முறைப்பாட்டில் இவ்வாறன கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  


இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன் ராஜகருணா தெரிவித்ததாவது :-


இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் மாய்ச் 20 ம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னர் புதிய சபைகள் நிறுவப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டதோடு, மார்ச் 9 ம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும்தர்தலில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை மக்கள் மத்தியில் உற்சாகம் காணப்படுகின்றது. 


தேர்தல்தொடர்பான பொதுக் கருத்துக் கணிப்புக்கள் அரசாங்கத்திற்கு மிகவும் பாதகமானவை என்பதை உணர்ந்து நிதியமைச்சராக இருக்கும் ஜனாதிபதி சில சுற்றறிக்கைகளை வெளியிட்ட அமைச்சரவை சில தீர்மானங்களை எடுத்துள்ளது   இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும் அரசமைப்பின் புனிதமான ஏற்பாடுகளை அப்பட்டமாக மீறும் வகையிலும் மக்களின் வாக்குரிமையைப் பறிககும் வகையில் நிறைவேற்று அதிகார சபை  அரசமைப்புக்கு முரணாகச் செயற்படுகின்றது.


எனவே இலங்கை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த விடயத்தில் ஐ.நா அலுவலகத்தைக் கேட்டுக் கொள்கின்றோம். என்றார்

 


 


 


தேர்தல் விடயத்தில் உடன் தலையிடுக - ஐ.நா.வை கோரியது எதிர்க்கட்சி உள்ளூராட்சித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள அரசமைப்புக்கு முரணான முயற்சிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாட்டை முன்வைத்துள்ளது் இந்த முறைப்பாட்டில் இவ்வாறன கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன் ராஜகருணா தெரிவித்ததாவது :-இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் மாய்ச் 20 ம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னர் புதிய சபைகள் நிறுவப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டதோடு, மார்ச் 9 ம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும்தர்தலில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை மக்கள் மத்தியில் உற்சாகம் காணப்படுகின்றது. தேர்தல்தொடர்பான பொதுக் கருத்துக் கணிப்புக்கள் அரசாங்கத்திற்கு மிகவும் பாதகமானவை என்பதை உணர்ந்து நிதியமைச்சராக இருக்கும் ஜனாதிபதி சில சுற்றறிக்கைகளை வெளியிட்ட அமைச்சரவை சில தீர்மானங்களை எடுத்துள்ளது   இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும் அரசமைப்பின் புனிதமான ஏற்பாடுகளை அப்பட்டமாக மீறும் வகையிலும் மக்களின் வாக்குரிமையைப் பறிககும் வகையில் நிறைவேற்று அதிகார சபை  அரசமைப்புக்கு முரணாகச் செயற்படுகின்றது.எனவே இலங்கை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த விடயத்தில் ஐ.நா அலுவலகத்தைக் கேட்டுக் கொள்கின்றோம். என்றார்   

Advertisement

Advertisement

Advertisement